நடிகர் ரவி மோகன் வீட்டில் துணிகரக் கொள்ளை...! ரூ.10 லட்சம் வைர நெக்லஸ் மாயம்...! - நீலாங்கரை போலீசில் அதிரடிப் புகார்...!
daring robbery at actor Ravi Mohan house diamond necklace worth 10 lakhs disappeared complaint filed Neelankarai police
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் அமைந்துள்ள பிரபல நடிகர் ரவி மோகனின் இல்லத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. வீட்டிற்கு வேலைக்குச் சென்றவர்கள் வீடு திரும்பவில்லை என்ற தகவல் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சென்றதைத் தொடர்ந்து காவலர்கள் உடனடியாக விசாரணையில் இறங்கினர்.

இதையடுத்து நீலாங்கரை காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டபோது, 2 பணிப்பெண்கள் மற்றும் ஒரு சிறுவன் வீட்டிற்குள் தங்கவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், வீட்டிலிருந்து சில பொருட்கள் மாயமானதாக சந்தேகம் எழுந்ததால், விசாரணைக்காக அவர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டிருந்ததாக நடிகர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருட்டு தொடர்பாக குற்றச்சாட்டு இருந்தால், சட்டப்படி காவல் நிலையத்தில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனிப்பட்ட முறையில் யாரையும் தங்க வைத்து விசாரணை நடத்துவது சட்டவிரோதமானது என்றும் காவலர்கள் அறிவுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட 2 பணிப்பெண்களும், அவர்களுடன் இருந்த சிறுவனும் அங்கிருந்து பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.மேலும் உரிய ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளிக்குமாறு நடிகர் தரப்பினருக்கு காவலர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.
இந்த நிலையில், நடிகர் ரவி மோகனின் வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்பிலான வைர நெக்லஸ் மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்கம் மாயமானதாக அவரது மேலாளர் நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
daring robbery at actor Ravi Mohan house diamond necklace worth 10 lakhs disappeared complaint filed Neelankarai police