விவசாயிகளான கூட்டுறவு சங்க நிர்வாகிகளுக்குக் கடன் தள்ளுபடியை மறுப்பதா? தவெக அரசின் வஞ்சனை - நயினார் நாகேந்திரன் கண்டனம்! - Seithipunal
Seithipunal


பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில், "தேர்தல் களத்தில் தமிழக விவசாயிகளின் "பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்" எனத் தேனொழுக வாக்குறுதி அளித்த திரு. ஜோசப் விஜய் அரசு, இன்று புதிய கட்டுப்பாடுகள் என்ற பெயரில் கூட்டுறவு சங்க நிர்வாகக் குழுவினரைக் குறிவைத்து அவர்களுக்குக் கடன் தள்ளுபடியை மறுத்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

அதுபோல, தங்களின் உரிமைக்காகப் போராடும் அவர்களை "எதிர்க்கட்சிகளால் தூண்டப்பட்டவர்கள்" என முதலமைச்சர் அவர்கள் குற்றஞ்சாட்டியிருப்பது, உழவர் சமூகத்தின் சுயமரியாதையைச் சிதைக்கும் செயலாகும். உழவர்கள் யாருடைய கைப்பாவையும் அல்ல; அவர்களின் போராட்டம் வாழ்வாதார உரிமைக்கான சுயமான குரலாகும்.

கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகளும், கௌரவப் பொறுப்புகளில் ஊதியமின்றிச் சேவையாற்றிய தலைவர்களும் அடிப்படையில் விவசாயிகளே ஆவர். அத்தகைய உழவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் பயிர்க்கடன் தள்ளுபடி கிடையாது என்ற புதிய விதியும், ஒரு லட்சம் ரூபாய் கடன் பெற்ற விவசாயிக்கு வெறும் ஐந்தாயிரம் ரூபாய் மட்டுமே தள்ளுபடி என்ற அறிவிப்பும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும். எனவே, கூட்டுறவுத் துறை விவசாயிகளைப் பழிவாங்கும் இந்த பாரபட்சமான தள்ளுபடி முறையைக் கைவிட்டு, அனைத்து உழவர்களின் பயிர்க்கடன்களையும் எவ்வித நிபந்தனையுமின்றி முழுமையாகத் தள்ளுபடி செய்ய திரு. ஜோசப் விஜய் அவர்கள் அரசை வலியுறுத்துகிறேன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

bjp nainar nagendran condemn to tvk govt


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->