விஜய்க்கு த்ரிஷாவின் பிறந்தநாள் வாழ்த்து!நள்ளிரவு 12 மணி.. 5 கேக்குகள்..ஒரே ஒரு போட்டோவால் இணையத்தை அதிரவிட்ட த்ரிஷா!
Trisha birthday wish for Vijay Midnight five cakes and a single photo Trisha took the internet by storm
தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது 52வது பிறந்தநாளை நேற்று கொண்டாடிய நிலையில், அவருக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
ஆனால், விஜய்யின் பிறந்தநாளையொட்டி பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்திருந்தபோதும், நடிகை த்ரிஷா சமூக வலைத்தளங்களில் எந்தவொரு பதிவையும் வெளியிடாதது ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, சமூக வலைத்தளங்களில் பல்வேறு யூகங்களும் வதந்திகளும் பரவின.
இந்த நிலையில், நடிகை த்ரிஷா தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் விஜய்யுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அந்தப் புகைப்படத்தில், கேக்குகள் வைக்கப்பட்டிருந்த மேசையின் அருகில் விஜய் புன்னகையுடன் காணப்படுகிறார். அவருக்கு அருகில் த்ரிஷாவும் மகிழ்ச்சியுடன் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களிடையே வேகமாக பரவி வருகிறது.
புகைப்படத்துடன் த்ரிஷா பதிவிட்டிருந்த வாசகம் தான் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது."To the person who makes it all worth it, HBD"
என அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் பொருள், “எல்லாவற்றையும் அர்த்தமுள்ளதாக மாற்றும் அந்த மனிதருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” என்பதாகும்.
அத்துடன் சிவப்பு இதய (❤️) எமோஜி மற்றும் கண் திருஷ்டி எமோஜியையும் இணைத்துள்ளார். மேலும், நள்ளிரவு 12 மணிக்கே வாழ்த்து தெரிவித்ததை சுட்டிக்காட்டும் வகையில் நேர குறிப்பையும் பதிவு செய்துள்ளார்.
த்ரிஷாவின் இந்த பதிவு வெளியாகிய சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கான லைக்குகள் மற்றும் கருத்துகளைப் பெற்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் அந்தப் பதிவை பகிர்ந்து தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும், விஜய் மற்றும் த்ரிஷா குறித்து சமூக வலைத்தளங்களில் பரவி வரும் பல்வேறு ஊகங்கள் மற்றும் தனிப்பட்ட உறவு தொடர்பான தகவல்களுக்கு எந்தவித அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Trisha birthday wish for Vijay Midnight five cakes and a single photo Trisha took the internet by storm