விருதுநகரில் அரங்கேறிய கொடூரம்; மொட்டை மாடியில் தூங்கியவர் சரமாரியாக வெட்டிக்கொலை; மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு..!
Police hunt down mysterious gang that brutally murdered a man sleeping on a terrace in Virudhunagar
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே சாமிநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா செல்வம் (30). இவர் பட்டுக்கோட்டையில் லோடுமேனாக வேலை செய்து வந்த நிலையில் திருமணமாகவில்லை. ராஜா செல்வம் பழனி கோயிலுக்கு செல்வதற்காக தனது சொந்த ஊரான சாமிநத்தம் கிராமத்திற்கு சென்றுள்ளார்.
அவர் பழனி கோயிலுக்கு சென்றுவிட்டு சாமி தரிசனம் செய்துவிட்டு, சாமிநத்தம் கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார். எப்போதும் வீட்டின் மொட்டை மாடியில் படுத்து தூங்குவதை வழக்கமாக கொண்ட ராஜா செல்வம் அதன்படி புதன்கிழமை இரவும், மொட்டை மாடியில் படுத்து உறங்கியுள்ளார்.
அப்போது நள்ளிரவுக்கு மேல் பயங்கர ஆயுதங்களுடன் வந்த ஒரு கும்பல் உறக்கத்தில் இருந்த ராஜா செல்வத்தை சரமாரியாக வெட்டி உள்ளனர். இந்த பயங்கர சம்பவத்தில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இவை ஏதும் தெரியாத ராஜா செல்வத்தின் குடும்பத்தினர், மறுநாள் காலை மாடிக்கு வந்துள்ளனர். அப்போது தங்களின் மகன் செத்துக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனதோடும் கதறி அழுதுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து திருச்சுழி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்த நிலையில் அங்கு விரைந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றதா? இவரை கொலை செய்தது யார் என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
English Summary
Police hunt down mysterious gang that brutally murdered a man sleeping on a terrace in Virudhunagar