'யார் உண்மையான நண்பன்... யார் பதவி ஆசை பிடிச்சவங்கனு தெரிஞ்சு போச்சு'...! - முஸ்லீம் லீக் விலகலால் கொதித்தெழுந்த ஆர்.எஸ். பாரதி
Who true friend who obsessed with power RS Bharathi angered by Muslim League withdrawal
இந்த தேர்தல் அரசியல் களத்தில் பலரின் உண்மையான முகத்தை வெளிக்கொண்டு வந்துள்ளதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக கூட்டணியில் இருந்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக் விலகியது குறித்து பல்வேறு கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது,“இந்த தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல. யார் உண்மையான நண்பர்கள், யார் சந்தர்ப்பவாதிகள் என்பதை மக்களுக்கு தெளிவாக உணர்த்திய தேர்தல் இது.யார் நட்பாக இருந்தார்கள், யார் எதிர் தரப்பில் நிற்கத் தயாராக இருந்தார்கள் என்பதையும் இந்த தேர்தல் தெளிவாக அடையாளம் காட்டியுள்ளது.

தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இடம்பெற்றுள்ள நிலையில், அவர்கள் கூட்டணியில் இருந்து விலகுவது இயல்பான ஒன்றுதான்.முஸ்லீம் லீக் எடுத்துள்ள இந்த முடிவு மற்ற கூட்டணி கட்சிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.எங்களின் அரசியல் பலம் எங்களுக்கு நன்றாக தெரியும்.
யார் கொள்கைக்காக இருந்தார்கள், யார் பதவிக்காக இருந்தார்கள் என்பதும் இப்போது வெளிப்படையாக தெரிந்துவிட்டது.எங்களுடன் இருந்த சில கூட்டணி கட்சிகள் கொள்கை காரணமாக அல்ல, பதவி ஆசையால் வேறு பாதையை தேர்ந்தெடுத்துள்ளன.
விஜய் ஆட்சி அமைப்பார் என்று எந்த ஊடக கணிப்பும் உறுதியாக கூறவில்லை. ஆனால் அரசியல் களத்தில் சில கட்சிகள் தங்களையே பலியாக்கிக் கொண்டன.
இந்தக் கூட்டணியில் இருந்து விலகிய கட்சிகள் தேர்தலுக்கு முன்பே முடிவு எடுத்திருந்தால், திமுக இன்னும் அதிக தொகுதிகளில் போட்டியிட்டிருக்கும்.”இவ்வாறு ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
English Summary
Who true friend who obsessed with power RS Bharathi angered by Muslim League withdrawal