சைபர் கிரிமினல்கள்: இந்திர்களிடம் ரூ.23 ஆயிரம் கோடி மோசடி: இந்த ஆண்டும் ரூ.1.2 லட்சம் கோடி மோசடி நடக்கும் எனவும் எச்சரிக்கை..!
Cyber criminals have so far defrauded Indians of Rs 23 thousand crores
கடந்த 2024-ஆம் ஆண்டு டிஜிட்டல் மற்றும் சைபர் மோசடிகளில் ரூ.23 ஆயிரம் கோடியை இந்தியர்கள் இழந்துள்ளதாக இந்திய சைபர்கிரைம் ஒருங்கிணைப்பு மையம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். அதில், இந்த ஆண்டு இந்தியர்களிடம் ரூ.1.2 லட்சம் கோடி மோசடி நடக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய சைபர்கிரைம் ஒருங்கிணைப்பு மைய ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2023-ஆம் ஆண்டு டிஜிட்டல் கிரிமினல்கள் மற்றும் மோசடியாளர்கள் ரூ.7,465 கோடியை திருடியுள்ளனர். மேலும், 2022-ஆம் ஆண்டு ரூ.2,306 கோடி பணம் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 2023 ஐ காட்டிலும் 03 மடங்கு அதிகமாகவும், 2022-ஆம் ஆண்டை காட்டிலும் 10 மடங்கு அதிகமாகவும் இந்தியர்கள் மோசடியாளர்களிடம் பணத்தை இழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 2023-இல் 15.6 லட்சம் புகார்களும், 2024இல் 20 லட்சம் புகார்களும் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கி மோசடி தொடர்பான மோசடிகளும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.
கடந்த 2024 - 25 நிதியாண்டை காட்டிலும் 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்த மோசடி 08 மடங்காக அதிகரித்துள்ளது. மோசடியால் இந்தியர்கள் இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் மட்டும் ரூ.21,367 கோடியை இழந்துள்ளதாகவும், முக்கியமாக தனியார் வங்கியில் தான் 60 சதவீத மோசடி நடந்துள்ளதாக ஆய்வில் மேலும் தெரிய வந்துள்ளது.
English Summary
Cyber criminals have so far defrauded Indians of Rs 23 thousand crores