வடமாநிலத்தவர்களை சேர்த்தால் தமிழக அரசியலே மாறும் - திருமாவளவன் பரபரப்பு பேட்டி.!!
vck leader thirumavalavan say tamilnadu politics change add north state peoples in vote list
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் தெரிவித்துள்ளதாவது:
"தமிழகத்தில் விரைவில் வாக்காளர் சிறப்பு திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது. வட மாநிலத்தவர்களை தமிழக வாக்காளர் பட்டியலில் இணைக்க முயற்சி செய்யப்படு வருகிறது. அப்படி வடமாநிலத்தவர்களை வாக்காளர்களாக சேர்த்தால் தமிழகத்தின் அரசியல் தலைகீழாக மாறும்.

பிற மாநிலத்தவர்களுக்கு தமிழ்நாட்டில் வாக்கு இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகளை நீக்கும் சதி உள்ளதாக தெரிகிறது. CAA சட்டத்தை நடைமுறைப்படுத்துகிறார்களோ என்ற ஐயம் எழுந்துள்ளது.
பாராளுமன்றத்தில் சிறப்பு திருத்தம் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக இல்லை.
சிறுபான்மையினர், தலித்துகள், பழங்குடிகள் போன்ற மக்களின் வாக்குகளை நீக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகளை நீக்கும் சதி உள்ளதாக தெரிகிறது.
தமிழக முதலமைச்சர் துணிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை விரைவில் கூட்ட வேண்டும்" என்றுத் தெரிவித்தார்.
English Summary
vck leader thirumavalavan say tamilnadu politics change add north state peoples in vote list