வெற்றிக் கழக இளைஞர்களுக்கு சீமான் எச்சரிக்கை..! -அரசியலில் பெருமையை விட சேவை முக்கியம்...!
Seeman warns youth Victory Party Service more important than pride politics
சென்னையில் இன்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் 'சீமான்', பத்திரிக்கையாளர்களை சந்தித்து உரையாற்றினார். அதில் அவர் குறிப்பிட்டதாவது,"தமிழக வெற்றிக் கழக இளைஞர்கள் இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம். பக்குவம் அடைய சில காலம் தேவைப்படும்.
உச்சம் தொட்டவன் இப்போ உங்களுக்காக வந்தேன் என்பது 'எதுக்கு வந்திங்க' என்ற கேள்வியை ஏற்படுத்துகிறது.அரசியலுக்கு வந்த பிறகு சேவை செய்யவேண்டும், பெருமை பேசக் கூடாது.

தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஒருவரை அழித்து அரசியலில் படையெடுக்கும் போது, மீண்டும் அண்ணா, எம்.ஜி.ஆரை கொண்டு வந்தால் என்ன செய்வது?விஜய் மற்றவர்களுக்கு தான் தலைவர்.
எனக்கு எப்போதும் தம்பிதான். விஜய்யை அரசியலில் நிலைநிறுத்தும் பொறுப்பு எனக்கு உள்ளது" என்று தெரிவித்துள்ளார். இது தற்போது அரசியல் வட்டாரங்களில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Seeman warns youth Victory Party Service more important than pride politics