விருதுநகர் அருகே வாலிபர் கொலை - காதல் விவகாரம் தான் காரணமா? போலீசார் விசாரணை.!!
youth murder near viruthunagar
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி அருகே புதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் பூமிநாதன் மகன் தமிழரசன். இவர், நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் தமிழரசன் புதுக்கோட்டையில் பிள்ளையார் கோவில் அருகில் உள்ள தோட்டத்தில் அரிவாள் வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார். இதைபார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து எம்.புதுப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தமிழரசன் உடலை மீட்டு பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்த கொலை வழக்கு குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், “தமிழரசன் தனது தாத்தா சங்கரலிங்கத்துடன் வசித்து வந்ததும், அப்போது ஒரு பெண்ணை காதலித்து வந்தார். ஏற்கனவே அந்த குடும்பத்துக்கும், தமிழரசனுக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் சேலத்தில் வேலை செய்து வந்த தமிழரசன் உள்ளூரில் நடந்த திருமண விழாவில் கலந்து கொள்ள வந்த போது, அவரை கொலை செய்தது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அதில் ஒருவரைத் தவிர மற்ற 6 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஒருவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
English Summary
youth murder near viruthunagar