உறுதி! இந்த ஆணவக் கொலைக்கு உரிய நீதியை பெற்றுத்தர நாம் தமிழர் கட்சி நிச்சயமாக துணை நிற்கும்! - சீமான் - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி ஏரல் அருகேயுள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த சந்திரசேகரின் மகன் 27 வயதான கவின் செல்வகணேஷ் என்பவர். சென்னையில் ஐ.டி. ஊழியரான கவின், கடந்த 27-ந்தேதி காவல் சப்-இன்ஸ்பெக்டர் தம்பதியான சரவணன்-கிருஷ்ணகுமாரியின் மகன் சுர்ஜித் (24) என்பவரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

இது ஜாதி வெறியால் நிகழ்தது என்பது தெரியவந்தது.இந்த ஆணவக்கொலை குறித்து பாளையங்கோட்டை காவலர்கள் வழக்குப்பதிவு செய்து சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் ''சீமான்'' ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.

சீமான்:

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டதாவது,"பட்டப்பகலில் வெட்டி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் தம்பி கவின் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வில் பங்கேற்று, தம்பியின் திருவுடலுக்கு மலர் வணக்கம் செலுத்தி, தம்பியை இழந்து ஆற்ற முடியா துயரத்தில் வாடும் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்து, உரிய நீதியைப் பெற்றுத்தர நாம் தமிழர் கட்சி துணை நிற்கும் என்று உறுதி அளித்தேன்" என்று தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற ஆணவக்கொலைக்கு துணி போகும் அனைவரும் தண்டிக்க படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Guaranteed Naam tamilar katchi definitely stand by ensure justice served for this caste murder Seeman


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->