நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்! மாற்றுத்திறனாளி, மனநல பாதிப்பு, இதய நோயாளிகளுக்கு முன்னுரிமை! - முதலமைச்சர் - Seithipunal
Seithipunal


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம் என்ற புதிய திட்டத்தை சென்னையில் தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:

அதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது," உடல் நலமாக இருந்தால் தான் மகிழ்ச்சியோடு வாழ முடியும். இன்று தொடங்கப்பட்ட நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் மனநல பாதிப்பு, மாற்றுத்திறனாளி,இதய நோயாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

எந்த ஒரு திட்டம் கொண்டு வந்தாலும் அதில் ஒருவர் கூட விடுபடக்கூடாது என்பது தான் எங்களது நோக்கம்.என்னை பொறுத்தவரை அரசின் திட்டங்களை ஒவ்வொரு தனிநபரையும் சென்றடைய வேண்டும்.கிராமப்புறங்களில் உள்ள ஏழைகளுக்கும் சிறந்த மருத்துவம் கிடைக்க வேண்டும்.

நகர்ப்புறங்களில் கிடைக்கும் மருத்துவ சேவை கிராமப்புற மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் புதிய திட்டம். மருத்துவமனைக்கு செல்ல முடியாதவர்களுக்கும் மருத்துவ சேவை அளிக்கவே நலன் காக்கும் ஸ்டாலின்" என்று தெரிவித்தார்.

கூடுதலாக முகாமிற்கு வருவோரை உங்கள் குடும்பத்தில் ஒருவராக பாவித்து சிறந்த சிகிச்சை வழங்க வேண்டும் என்றும் மருத்துவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.இதனால் மக்கள் வீடு திரும்பும்போது மனநிறைவுடன் செல்வார்கள் என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Stalins health saving scheme Priority given differently abled mentally ill and heart patients Chief Minister


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->