தனுஷ் சிறுவயதில் பட்ட கஷ்டம்! நிஜமாகவே ஏழையாக இருந்தாரா தனுஷ்? உண்மையை சொன்ன மூத்த நடிகர்! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், சமீபத்தில் நடந்த “இட்லி கடை” படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனது சிறுவயது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறியதாவது – “சின்ன வயதில் தினமும் இட்லி சாப்பிடணும் என்று ஆசை இருக்கும். ஆனா அதற்கே பணம் இருக்காது. காலையில் வேலைக்கு போய் சம்பாதிச்ச 2 ரூபாய் 50 காசுல தான் கடைக்கு சென்று இட்லி வாங்கி சாப்பிடுவேன்” என்று உருக்கமாக நினைவுகூர்ந்தார்.

இந்தப் பேச்சு ரசிகர்களிடையே பரவலாகப் பேசப்பட்டது. ஆனால், சமூக வலைதளங்களில் சிலர் – “தனுஷின் அப்பா பெரிய இயக்குநர் கஸ்தூரி ராஜா. அப்படி இருக்க, அவர் ஏன் ஏழைபோல பேசுகிறார்?” என்று விமர்சிக்கத் தொடங்கினர்.

இதே நேரத்தில், இயக்குநரும் நடிகருமான விசு அவர்கள் உயிருடன் இருந்த காலத்தில் அளித்திருந்த ஒரு பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் அவர் கூறியிருந்ததாவது –“கஸ்தூரி ராஜா என்கிட்ட 15 படங்களில் துணை இயக்குநராக வேலை செய்திருக்கிறார். அந்த சமயம், அவர் குடும்பம் சென்னையில் கண்ணம்மாபேட்டை அருகே வசித்தார்கள். அவர்களுடைய வீட்டில் டிவி கூட இருக்காது. தனுஷ், செல்வராகவன், அவர்களுடைய இரண்டு சகோதரிகள் – எல்லாரும் என் அண்ணன் வீட்டுக்கே வந்து டிவி பார்க்கும்” என்று.

விசு கூறிய அந்தச் சம்பவங்களை பார்க்கும்போது, தனுஷ் சொன்ன சிறுவயது வறுமைக் கதைகள் வெறும் பேச்சு அல்ல, உண்மைதான் என்பதும் தெளிவாகிறது.

ஒரு பக்கம், தனுஷ் இன்று உலகளவில் புகழ்பெற்ற நடிகராக வளர்ந்திருக்கிறார். ஆனால், அவர் கடந்துபோன சிறுவயது போராட்டங்களை நினைவுகூர்ந்த அந்தக் கதைகள், ரசிகர்களுக்கு ஒரு உண்மைச் சாட்சி தருகின்றன.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dhanush childhood hardships Was Dhanush really poor A veteran actor told the truth


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->