முதல்முறையாக திமுகவின் திருச்சி மாநாட்டில் பங்கேற்ற ஓ.பன்னீர்செல்வம்; அரங்கம் அதிர்ந்த வரவேற்பு..!
Ministers give enthusiastic welcome to O. Panneerselvam who participated in DMKs Trichy conference for the first time
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், "ஸ்டாலின் தொடரட்டும் - தமிழ்நாடு வெல்லட்டும்" என்ற தலைப்பில் திமுகவின் பலத்தை பறைசாற்றும் விதமாக நேற்று திருச்சியில் எழுச்சி மாநாடு நடத்தப்பட்டது.
திருச்சி சிறுகனூரில் நேற்று நடைபெற்ற திமுகவின் 12 வது மாநில மாநாட்டில் திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கட்சியின் அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என லட்சக்கணக்கானோர் கலந்துக் கொண்டனர்.

இம்மாநாட்டில் சமீபத்தில் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்ட தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னேர்செல்வம் கலந்துக்கொண்டார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அவர் பரம எதிரி கட்சியான திமுகவில் இணைந்தமை அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் திமுக கட்சியில் மாநாட்டிற்கு வந்த அவரை மேடைக்கு வந்த போது அங்கிருந்த திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் எழுந்து நின்று அவரை உற்சாகத்துடன் வரவேற்றனர். அதாவது, நீண்டகாலமாக அதிமுகவில் இருந்து முதல்வராகவும் பதவி வகித்த ஓபிஎஸ் திமுக மாநாட்டில் பங்கேற்பது இதுவே முதல்முறையாகும்.
இந்த மாநாட்டு மேடையின் முதல் வரிசையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அருகில் அவர் அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
Ministers give enthusiastic welcome to O. Panneerselvam who participated in DMKs Trichy conference for the first time