ஈரானுக்கு அசைக்க முடியாத ஆதரவு; ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபாவுக்கு ரஷ்ய அதிபர் வாழ்த்து..!
Russian President congratulates Irans new Supreme Leader Mojtaba
அணு ஆயுத போட்டி காரணமாக இஸ்ரேல் உடன் இணைந்து அமெரிக்கா ஈரான் மீது கடந்த 18-ந்தேதி (சனிக்கிழமை) காலை முதல் தாக்குதல் நடத்துகிறது. தொடர் தாக்குதல்கள் நடந்து வரும் நிலையில் ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுத்தாக்குதலில் ஈரான் நாட்டின் உச்ச தலைவராக 35 ஆண்டுகாலம் இருந்த அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதுவரை 1332 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அவரது மகன் மொஜ்தபா காமேனி ஈரானின் புதிய உச்ச தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஈரான் பாராளுமன்ற நிபுணர்கள் குழு இவரை புதிய தலைவராக தேர்வு செய்துள்ளது. அதன்படி, ஈரான் ராணுவம் மற்றும் அரசியல் தலைவர்கள் மொஜ்தபாவுக்கு விசுவாசமாக இருப்பதாக உறுதி மொழி எடுத்துக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் புதிய உச்ச தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மொஜ்தபாவுக்கு விளாதிமிர் புடின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதாவது, மொஜ்தபாவுக்கு வாழ்த்துகள். ரஷியா தொடர்ந்து ஈரானுக்கு துணை நிற்கும். ஈரானுக்கு அசைக்க முடியாத ஆதரவு மற்றும் நமது ஈரானிய நண்பர்களுடன் ஒற்றுமையை உறுதிப்படுத்த விரும்புவதாக புதின் அவருடைய வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Russian President congratulates Irans new Supreme Leader Mojtaba