சிலர் நாங்கள்தான் தி.மு.க.வுக்கு மாற்று என்கிறார்கள்... எதை மாற்றப் போகிறார்கள்? மறைமுகமாக விஜயை சாடிய ஸ்டாலின்!
DMK MK Stalin TVK Vijay
தி.மு.க.வின் முப்பெரும் விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மற்றும் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அதில், எடப்பாடி பழனிசாமி சொன்னது உண்மையே, அதிமுக ஆட்சியை காப்பாற்றியது பாஜக தான் என்றார். கைப்பாவை அரசை தி.மு.க. கலைத்ததால் பாஜக எங்கள்மீது கோபம் கொண்டு தொடர்ந்து சிக்கல்கள் ஏற்படுத்தி வருகிறது. அதை வைத்து நாங்கள் பயந்து போய்விடுவோம் என்று அவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால் தி.மு.க. எப்போதும் அச்சத்துக்கு இடம் கொடுக்கும் கட்சியல்ல என தெளிப்படுத்தி பேசினார்.
இந்தியாவில் மாநில அரசை வெற்றிகரமாக கைப்பற்றிய முதல் மாநிலக் கட்சி தி.மு.க. என்ற பெருமை எங்களுக்கு உண்டு. எங்களிடம் 70 ஆண்டுகளுக்கு மேல் அரசியல் பயணம் இருக்கிறது. ஆரம்பத்திலிருந்தே தி.மு.க.வை ஒழிப்போம், அழிப்போம் என பல கட்சிகள் கூறினாலும், எங்கள் கட்சி இன்று வரை உறுதியாக நிற்கிறது.
இன்றும் சிலர் நாங்கள்தான் தி.மு.க.வுக்கு மாற்று என்கிறார்கள். ஆனால் எதை மாற்றப் போகிறார்கள்? நமது கொள்கைதான் நமது பலம். மாற்ற வேண்டும் எனக் கூப்பிட்ட பலர் மாறிப்போயினர், மறைந்துவிட்டனர். ஆனால் தி.மு.க. மட்டும் மாறவில்லை, மக்களின் மனதில் நிலைத்திருக்கிறது. இதுவே தமிழ்நாட்டின் அரசியல் நிஜம் என ஸ்டாலின் வலியுறுத்தினார்.