பிகார் தேர்தல்: வாக்கு எந்திரங்களில் புதிய மாற்றம் செய்த தேர்தல் ஆணையம்!
Bihar Election 2025 vote machine
இந்தியாவில் நடைபெறும் மக்களவை மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களில் வாக்கு இயந்திரங்கள் (EVM) பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் வேட்பாளர்களின் பெயர், கட்சி சின்னம், புகைப்படம் ஆகியவை அச்சிடப்பட்டிருக்கும். இதனை பார்த்து வாக்காளர்கள் தங்களது விருப்பப்படி வாக்களிப்பார்கள்.
ஆனால் சில நேரங்களில் புகைப்படம் மற்றும் சின்னங்கள் தெளிவாக தெரியாததால் வாக்காளர்களுக்கு குழப்பம் ஏற்படுகின்றது. இதனைத் தவிர்க்க தேர்தல் ஆணையம் புதிய நடவடிக்கை எடுத்து வருகிறது.
பீகார் தேர்தலிலிருந்து தொடங்கி, வேட்பாளர்களின் புகைப்படங்கள் கலரில் அச்சிட்டு ஒட்டப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், ஒவ்வொரு வேட்பாளருக்கும் ஒதுக்கப்பட்ட சீரியல் நம்பரும் தெளிவாக அச்சிடப்படும்.
இதன் மூலம் வாக்காளர்கள் வேட்பாளரின் புகைப்படத்தையும், சின்னத்தையும் தெளிவாக பார்த்து, சீரியல் நம்பருடன் ஒப்பிட்டு சரியான தேர்வைச் செய்ய முடியும்.
மேலும், வாக்கு இயந்திரத்தில் வேட்பாளர் புகைப்படத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் நான்கில் மூன்றாம் பங்கு பகுதியை கலர் படத்திற்காக ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த மாற்றம் அமல்படுத்தப்பட்டால், வாக்காளர்கள் குழப்பமின்றி வாக்களிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Bihar Election 2025 vote machine