அடுத்தடுத்து மருத்துவமனையில் அட்மிட் ஆகும் திரைபிரபலங்கள் - இப்போ யார் தெரியுமா?
actor robo sankar admitted hospital
சின்னத்திரையில் நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி வெள்ளித்திரை சினிமாவுக்கு வந்தவர் நடிகர் ரோபோ சங்கர். நிறைய படங்களில் காமெடி வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
விஜய்யுடன் புலி, அஜித்துடன் விஸ்வாசம், தனுசுடன் மாரி, சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் என்று முன்னணி நடிகர்கள் படங்களிலும் காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்து தனக்கென்று தனி ரசிகர் கூட்டத்தை சேர்த்தார்.
இதற்கிடையே நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவு காரணமாக உடல் மெலிந்து காணப்பட்ட நிலையில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், நடிகர் ரோபோ சங்கர் இன்று சென்னையில் படப்பிடிப்பில் இருந்தபோது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயக்கமடைந்தார்.
இதையடுத்து, அவர் துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். சிகிச்சைக்குப்பின் ஓரிரு நாட்களில் ரோபோ சங்கர் வீடு திரும்புவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
actor robo sankar admitted hospital