விஜய் -அதிமுக பேச்சுவார்த்தையில் முளைத்தது தான் பாஜக கூட்டணி! - உண்மையை உடைத்த அன்வர் ராஜா - Seithipunal
Seithipunal


அ.தி.மு.க. கட்சியிலிருந்து விலகி, எதிர்க்கட்சியான தி.மு.க.வில் சேர்ந்த முன்னாள் அமைச்சர் 'அன்வர் ராஜா'' பிரபல நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது,"பாரதிய ஜனதா திட்டமிட்டு எடப்பாடி பழனிசாமியை கட்டுப்படுத்த காய்களை நகர்த்தி வருகிறது. பல விஷயங்களில் மவுனமாக இருந்து அ.தி.மு.க.வின் அடிப்படை கொள்கைகளிலிருந்து எடப்பாடி பழனிசாமி விலகி செல்கிறார்.

அ.தி.மு.க.வை முழுவதுமாக 8 பேர்தான் வழிநடத்தி செல்கிறார்கள்.அதில் பல மூத்த தலைவர்களுக்கு பாரதிய ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்தது பெருசாக பிடிக்கவில்லை. தமிழகத்தில் 14 % இருக்கும் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களின் வாக்குகளை இழந்து விடுவோம் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

மேலும், எடப்பாடி பழனிசாமியும் முதலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று தான் தெரிவித்தார். இருப்பினும், விஜய் கட்சியுடன் அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியதும் பாரதிய ஜனதா பதறிவிட்டது.அ.தி.மு.க.வுக்கும் விஜய் கட்சிக்கும் இடையே ரகசிய பேச்சு நடந்தது எனக்கு தெரியும்.

இதில் விஜய் கட்சிக்கு 60 தொகுதிகள் வரை விட்டு கொடுக்க அ.தி.மு.க. தரப்பில் சம்மதித்தது.இருப்பினும்,விஜய் கட்சியினர் முதல்-மந்திரி பதவியை விட்டு தரவேண்டும் என்றனர். ஆனால் அதை அ.தி.மு.க. ஏற்கவில்லை என்றாலும் பேச்சுவார்த்தை முடியாமல் தொடர்ந்து நடந்துக் கொண்டுதான் இருந்தது.

இதை அறிந்த பா.ஜ.க தலைவர்கள் அ.தி.மு.க.வுக்கும் விஜய் கட்சிக்கும் கூட்டணி வந்தால் தங்களுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என்பதை உணர்ந்தனர். அந்த பயத்தில்தான் அமித்ஷா அவசரம் அவசரமாக சென்னைக்கு வந்து அ.தி.மு.க.-பா.ஜ.க. இடையே கூட்டணி என்று சமூக வலைதளங்கள் மூலமாக அறிவித்தார்.

பாஜக திட்டத்தால் அ.தி.மு.க. வுக்கு தான் பாதிப்பு.இது அ.தி.மு.க.விலுள்ள பல மூத்த தலைவர்களுக்கு நன்றாகவே தெரியும் என்றாலும் வேறு வழியில்லாமல் பொறுத்துக் கொண்டு இருக்கிறார்கள்" என்று தெரிவித்தார். இது தற்போது அரசியல் வட்டாரங்களில் சற்று சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP alliance was born out Vijay AIADMK talks Anwar Raja reveals truth


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->