கஞ்சா வாங்க காசு கொடுக்காத பாட்டி; கழுத்து அறுத்து கொலை செய்த பேரன்; கொல்லத்தில் அரங்கேறிய கொடூரம்..!
A youth has been arrested for slitting the throat of a grandmother in Kollam who refused to pay him money to buy ganja
கஞ்சா வாங்க பணம் கொடுக்காததால் பாட்டியை வாலிபர் ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சவரா அருகே வட்டத்தரை பகுதியை சேர்ந்தவர் 68 வயதான சுலேகா பீவி அவரது மகள் வழி பேரன் ஷஹனாஸ். வயது 30. போதைப் பொருளுக்கு அடிமையானவர் இவர், ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். அத்துடன், அடிக்கடி தனது தாய் மற்றும் பாட்டியை மிரட்டி போதைப் பொருளுக்காக பணம் வாங்குவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். அதேபோன்று சம்பவ தினமான நேற்று நேற்று இரவு தனது பாட்டி, சுலேகா பீவியிடம் கஞ்சா வாங்குவதற்கு பணம் கேட்டுள்ளார்.

கொடுக்க மறுத்த பாட்டியை ஈவு இரக்கமின்றி ஷஹனாஸ், கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, உடலை கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்துள்ளார். வெளியில் சென்றிருந்த ஷஹனாசின் தாய் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்த போது கட்டிலுக்கு அருகே ரத்தக்கறை இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
கட்டிலுக்கு அடியில் பார்த்தபோது தாய் சுலேகா பீவி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தத்தை பார்த்து அவர், துக்கம் தலத்து கதறி அழுதுள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் விரைந்து வந்து சுலேகா பீவியின் உடலைக் கைப்பற்றியுள்ளனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக கொல்லம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் கொலை செய்த ஷஹனாசை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த கொடூர கொலை சம்பவம் கொல்லத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
A youth has been arrested for slitting the throat of a grandmother in Kollam who refused to pay him money to buy ganja