நல்ல காதல்-கள்ளக்காதல் என்று பிரிக்கிறீர்களா? அதுதான் சமூகத்தின் ஆதிக்கம்! - சேரன் - Seithipunal
Seithipunal


சேலம் நகரில் நடைபெற்ற கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்று இலக்கியமும் சினிமாவும் ஒன்று சேரும் கலவையாக மாறியது. இயக்குநர் சேரன், கோபி நயினார், சிம்பு தேவன் உள்ளிட்டவர்கள் பங்கேற்ற இந்த விழாவில், ஹோமியோபதி மருத்துவர் சசிகுமார் எழுதிய ‘கன்னக் குழியில் விழுந்த கண்கள்’ நூல் வெளியிடப்பட்டது.

பாடலாசிரியர் அறிவுமதி நூலை வெளியிட்டார்; மேலும் இயக்குநர்கள் அதை பெருமையுடன் பெற்றுக்கொண்டனர்.இவ்விழாவின் முக்கியக் கவன ஈர்ப்பான தருணமாக இயக்குநர்-நடிகர் சேரனின் உரை அமைந்தது.

வலுவான வார்த்தைகளால் பேசத் தொடங்கிய அவர்,“காதல் என்பது பெண்கள் மீது மட்டுமே வரவேண்டும் என்ற கட்டுப்பாடு அல்ல. ஒரு உயிரை நேசிக்கும் திறனே உண்மையான காதல். காதலுக்கு ‘நல்லது’, ‘கெட்டது’ என்ற பிரிவுகள் கிடையாது. சமூகம் நம் மேல் திணிக்கும் கருதுகோள்கள்தான் ‘கள்ளக்காதல்’ என்று சொல்ல வைக்கிறது.

நம்மிடம் இல்லாததைப் பெறுபவர்களுக்கே பொறாமைப் பிடிக்கும்; அதனால் பிறரின் காதலை குறை சொல்லுவார்கள். வாழ்க்கையின் பாரத்தைத் தூக்கிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்க வேண்டாம்… மனம் எதை காதலிக்க தூண்டுகிறதோ, அதைத் தயக்கமின்றி காதலிக்கத் தொடங்குங்கள்” என்று உணர்ச்சியோடு பேசியார்.

‘ஆட்டோகிராப்’ போன்ற படங்கள் மூலம் காதலின் ஆழத்தையும், மனித உணர்வின் மென்மையையும் திரையில் வரையந்த சேரனின் இந்த கருத்துகள், விழாவில் இருந்தவர்களை சிந்திக்கச் செய்தன.

21 ஆண்டுகளுக்குப் பிறகும் மறுவெளியீட்டில் வெற்றிகரமாக ஓடிய ‘ஆட்டோகிராப்’ போலவே, இவரின் பேச்சும் மீண்டும் காதலின் வரம்புகளை மறுபரிசீலிக்க வைத்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Do you differentiate between good love and fake love That dominance society Cheran


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->