Removable பேட்டரியுடன் கூடிய 'Jolla ஸ்மார்ட்போன்' அறிமுகம்: விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் உள்ளே..! - Seithipunal
Seithipunal


பின்லாந்து நாட்டை சேர்ந்த 'Jolla' நிறுவனம்,கையடக்க தொலைபேசி பாவனையாளர்கள் தங்களது போனின் பேட்டரியை மாற்றக்கூடிய வகையிலான புதிய மொபைல் போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த மொபைல் போனை இந்தியா உட்பட உலகம் முழுவதும் உள்ள பயனர்கள் ப்ரீ-ஆர்டர் செய்து பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011-இல் தொடங்கப்பட்ட Jolla நிறுவனம், நோக்கியா நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களுடன் இணைந்து இந்த முயற்சியை தொடங்கியுள்ளது. சைல்பிஷ் இயங்குதளம், ஏஐ மற்றும் நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை இந்நிறுவனம் வடிவமைத்து வருகிறது.

இந்நிலையில், நீண்ட வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஜொல்லா நிறுவனம் ஸ்மார்ட்போனை வடிவமைத்துள்ளது. இந்த போனின் அதன் சைல்பிஷ் ஓஎஸ் இயங்குதள போனை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. குறித்த ஸ்மார் ஆண்ட்ராய்டு போனில் இயங்கும் செயலிகளை பயனர்கள் பயன்படுத்த முடியும்.

அத்துடன், பயனர்களே போனின் பேட்டரியை மாற்றக்கூடிய (Removable) வகையில் இந்த போன் வடிவைக்கப்பட்டுள்ளது சிறப்பம்சமாகும். அதாவது கடந்த காலங்களில் நாம் பாவித்த பழைய முறையில் பேட்டரியை கழட்டி மாட்டும் அனுபவத்தை அளிக்கிறது. இப்போது சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான போன்கள் இன்-பில்ட் முறையில் வெளிவருகிறது. 

இந்திய மதிப்பில் ரூ.10,409 செலுத்தி குறித்த ஸ்மார்ட்போனை பயனர்கள் ப்ரீ-ஆர்டர் செய்யலாம் என்றும், முதல் பேட்சில் ஆர்டர் செய்தவர்களுக்கு இந்த போன் ரூ.52,465 என்ற விலையில் கிடைக்கும். இந்த போனின் சந்தை விலை ரூ.62,980 முதல் ரூ.73,495 வரை இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த ‘Jolla ஸ்மார்ட் போனில் உள்ள  சிறப்பு அம்சங்கள் என்னென்ன..?

6.36 இன்ச் AMOLED டிஸ்பிளே.

மீடியாடெக் 5ஜி சிப்செட்.

12ஜிபி ரேம்.

256ஜிபி ஸ்டோரேஜ்.

50 + 13 மெகாபிக்சல் கேமரா (பின்பக்கம்)

5,500 mAh பேட்டரி.

சைல்பிஷ் இயங்குதளம்.

5ஜி நெட்வொர்க்.

ட்யூயல் நேனோ சிம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Jolla smartphone with removable battery price and special features inside


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->