'வந்தே மாதரம் ஓரங்கட்டப்பட்டது இந்திய மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி'; லோக்சபாவில் ராஜ்நாத் சிங்..! - Seithipunal
Seithipunal


'வந்தே மாதரம்' பாடலின் 150-வது ஆண்டு நிறைவு குறித்து லோக்சபாவில் சிறப்பு விவாதம் நடைபெற்றது. இதில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசும் போது கூறியதாவது, 

முன்னாள் பிரதமர் நேரு காலத்தில் தொடங்கிய திருப்திபடுத்தும் அரசியல் காரணமாக தேசிய பாடலான வந்தே மாதரம் ஓரங்கட்டப்பட்டதாகவும், இது இந்திய மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என  வந்தே மாதரம் பாடலுக்கு கிடைக்க வேண்டிய நீதி கிடைக்கவில்லை. என்று பேசியுள்ளார்.

அதாவது, தேசிய கீதமும், தேசிய பாடலும் சமமற்ற முறையில் நடத்தப்பட்டன என்றும், தேசிய கீதம் தேசிய உயர்வில் ஒரு இடத்தைப் பிடித்தது. ஆனால், தேசியப்பாடல் ஓரங்கட்டப்பட்டது. இது வந்தே மாதரத்துக்கு இழைக்கப்பட்ட அநீதி, ஒரு தனிமைபடுத்தப்பட்ட சம்பவம் அல்ல. மாறாக காங்கிரசின் திருப்திபடுத்தும் அரசியலின் தொடக்கமாகும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இது ஒரு பாடலுக்கு இழைக்கப்பட்ட அநீதி அல்ல. சுதந்திர இந்திய மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று ரங்கநாத் சிங் தெரிவித்துள்ளார். அத்துடன்,'வந்தே மாதரம்' என்பது வெறும் வார்த்தைகள் அல்ல என்றும், அது உணர்ச்சி, கவிதை, துடிப்பு மற்றும் ஒரு தத்துவம் என்றும் கூறியுள்ளார். இது இந்தியர்களுக்கானதாக மட்டும் அல்லாமல், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கான மந்திரமாக மாறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 1912-ஆம் ஆண்டு கோபால் கிருஷ்ண கோகலே தென் ஆப்ரிக்கா வந்த போது, 'வந்தே மாதரம்' என சொல்லி வரவேற்றனர். பகத் ஷிங் மற்றும் சந்திரசேகர் ஆசாத் ஆகியோர் 'வந்தே மாதரம்' என சொல்லி கடிதம் எழுதுவார்கள். இது சாதாரண பாடல் மட்டும் இல்லை என்றும் லோக்சபாவில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், முழுமையானதாக இருக்கும் வந்தே மாதரத்தை முழுமையில்லாததாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், ஒவ்வொரு முறையும் அது நம் நாட்டின் அழியாத பாடலாக இருந்து வருகிறது. அது அப்படியே இருக்கும் என்றும் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rajnath Singh in Lok Sabha says that the marginalization of Vande Mataram is an injustice done to the people of India


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->