தர்ஷனின் உடல்நிலை ரகசியம் என்ன...? - மருத்துவ பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்...!
What secret Darshans health Shocking information revealed medical examination
கன்னட திரைப்பட உலகின் முன்னணி நடிகரான தர்ஷன், சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்பு பல்லாரி சிறையில் இருந்தபோது, அவர் கடுமையான முதுகுவலி காரணமாக சிகிச்சை தேவைப்படுவதாக தெரிவித்திருந்தார். அந்த காரணத்தைக் கூறி அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்ததை தொடர்ந்து, கர்நாடக உயர் நீதிமன்றம் அவருக்கு தற்காலிக ஜாமீன் வழங்கியது.

ஆனால், ஜாமீனில் வெளியே வந்த தர்ஷன் எந்த அறுவை சிகிச்சையையும் மேற்கொள்ளவில்லை. இதை அடுத்து சுப்ரீம் கோர்ட்டு அந்த ஜாமீனை ரத்து செய்து, அவர் மீண்டும் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.மேலும், சிறைவாசத்தின் போது தர்ஷன் மீண்டும் முதுகுவலி இருப்பதாக புகார் செய்தார்.
சிறை மருத்துவர்கள் அவருக்கு பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகளை வழங்கினர். பின்னர், சி.வி. ராமன் மருத்துவமனை மருத்துவர்கள் குழு தர்ஷனுக்கு முழு மருத்துவ பரிசோதனை நடத்தி,முதுகுவலி குறித்த எந்த அறிகுறியும் இல்லை,உடல் நிலை நன்றாக உள்ளது என்று சிறை அதிகாரிகளிடம் அதிகாரப்பூர்வ அறிக்கை சமர்ப்பித்தது.
இதையடுத்து, சிறையில் தர்ஷனுக்கு வழங்கப்பட்ட வந்த பிசியோதெரபி சிகிச்சை உடனடியாக நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.ஏற்கனவே, முதுகுவலி காரணமாக தவறான மருத்துவ அறிக்கை பெற்று ஜாமீன் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகள் மீண்டும் தீவிரமாகியுள்ளது.
English Summary
What secret Darshans health Shocking information revealed medical examination