எச்சரிக்கை! தேர்தல் வாக்கு திருட்டில் ஈடுபட்ட யாரையும் விட்டு விட மாட்டோம்!- கொந்தளித்த ராகுல் காந்தி - Seithipunal
Seithipunal


மக்களவை எதிர்கட்சித் தலைவர் ''ராகுல் காந்தி'' அவர்கள்,தேர்தல் ஆணையம், பாஜக நரேந்திர மோடிக்கு ஆதரவாக வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.இதுகுறித்து தங்களிடம் 100 % தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் இருப்பதாக அவர் நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார்.

இதனை பாராளுமன்ற வளாகத்தில் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்த ராகுல், "தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாக வாக்காளர் பட்டியலில் முறைகேடுகளைச் செய்தது என்றும் இதுகுறித்து 'அணு குண்டு' போன்ற ஆதாரங்கள் இருப்பதாகவும், அவை வெளியானால் தேர்தல் ஆணையம் ஒளிந்துகொள்ள இடம் இருக்காது என்றும்" தெரிவித்தார்.

இதில் கடந்த ஆண்டு நடந்த மத்தியப் பிரதேச சட்டசபை தேர்தலிலும், மக்களவைத் தேர்தலிலும் முறைகேடுகள் நடந்ததாக சந்தேகம் எழுந்ததாகவும், இந்த சந்தேகம் மகாராஷ்டிராவில் மேலும் வலுவடைந்ததாகவும் அவர் தெரிவிக்கின்றார்.அந்த மகாராஷ்டிராவில் வாக்காளர் பட்டியலில் கோடிக்கணக்கான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பான விரிவாக ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டு தெரிவித்தார்.

மேலும், 'தேர்தல் ஆணையத்தில்இருக்கும் அதிகாரிகள், உயர் பதவி வகிக்கும் கீழ் நிலை வரை, இந்த முறைகேடுகளில் ஈடுபடுவர்கள் நாட்டுக்கு எதிராக செயல்படுகிறார்கள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஓய்வு பெற்றாலும் அவர்களை விட்டுவிட மாட்டோம்" என்று ராகுல் ஆக்ரோஷமாக எச்சரித்தார்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு இடையில்,காங்கிரஸ் மற்றும் பல எதிர்க்கட்சித் தலைவர்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில்,'பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து உடனடியாக ஒரு சிறப்பு விவாதம் நடத்த வேண்டும்" என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தற்போது பெருமளவில் பேசுபொருளாக நாட்டில் மாறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Warning We not spare anyone involved election fraud angry Rahul Gandhi


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->