காதலிக்காக திருடனாக மாறிய காதலன்! காதலிக்காக நண்பரின் தாயாரிடமே கைவரிசை
A lover who turned thief for his girlfriend He even cheated on his friend mother for his girlfriend
குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பள்ளியாடி முருங்கவிளை பகுதியை சேர்ந்தவர் ஜெய்சன் ஆர். ஜெபனேசர் (29). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு, திருவட்டார் பகுதியை சேர்ந்த ஆனந்த் (26) என்பவர் பெயிண்டிங் வேலைக்காக ஜெய்சன் வீட்டுக்கு வந்தார். அந்த சந்தர்ப்பத்தில் இருவருக்கும் நட்பு ஏற்பட்டது.
அதே சமயம், ஜெய்சனின் தாயார் ரெஜி (63) உடல்நலக் குறைவால் தவித்து வந்ததால், அவருக்கு உதவி செய்து வந்ததாக ஆனந்த் நெருக்கத்தை வளர்த்தார்.
இதற்கிடையில், சம்பவத்தன்று மாலை ஜெய்சன் வீட்டுக்கு வந்தபோது, அவரது தாயார் அழுது கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். காரணம் கேட்டபோது, கழிவறையில் மயங்கி விழுந்ததாகவும், பிறகு கண் விழித்தபோது தான் அணிந்திருந்த கம்மல் உள்பட 11 பவுன் நகை காணாமல் போயிருந்தது எனவும் கூறினார்.
உடனே தக்கலை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில் இந்தத் திருட்டு ஆனந்த் என்பவரின் காரியமாக இருப்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில் ஆனந்த் கூறியதாவது:“நான் பி.இ. படித்தேன். ஆனால் தகுந்த வேலை கிடைக்காமல் பெயிண்டிங் வேலை பார்த்து வந்தேன். ஒரு பெண்ணை காதலித்தேன். அவரை திருமணம் செய்ய முடிவு செய்திருந்தேன்.
அவருக்காக நகை வாங்க ஆசைப்பட்டேன். ஆனால் பணம் இல்லாததால், ஜெய்சனின் தாயார் மயங்கி கிடந்தபோது அவர் அணிந்திருந்த நகையை பறித்தேன். பிறகு ஒன்றும் தெரியாதது போல நடந்துகொண்டேன். ஆனால் போலீஸ் விசாரணையில் சிக்கிக் கொண்டேன்.”
என வாக்குமூலம் அளித்துள்ளார்.தற்போது ஆனந்த் போலீசாரால் கைது செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
English Summary
A lover who turned thief for his girlfriend He even cheated on his friend mother for his girlfriend