மீட்டியோர் 350 பைக் : சிறந்த அம்சங்களுடன் புதிய வண்ணங்களில் அப்டேட் செய்த ராயல் என்ஃபீல்டு - என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
Meteor 350 Bike Royal Enfield has updated it with new colors with great features do you know what special
ராயல் என்பீல்டு நிறுவனம் தனது பிரபலமான மீட்டியோர் 350 பைக்கை நவீனப்படுத்தி, புத்தம் புதிய வண்ணங்களுடன் அதிரடியாக அறிமுகப்படுத்தியுள்ளது.
பயர்பால், ஸ்டெல்லர், அரோரா, சூப்பர் நோவா என மொத்தம் நான்கு வேரியன்ட்களில் வெளியாகியுள்ள இந்த புதிய மாடல்கள், வண்ண வேறுபாட்டால் பைக் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
புதிய எல்இடி ஹெட்லைட், டிரிப்பர் நேவிகேஷன் பாட், எல்இடி இண்டிகேட்டர், டைப்-சி யூஎஸ்பி பாஸ்ட் சார்ஜிங் போர்ட், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் ஆகிய நவீன அம்சங்கள் பயர்பால் மற்றும் ஸ்டெல்லர் வேரியன்ட்களில் இடம்பெறுகின்றன. மேலும் அட்ஜெஸ்டபிள் பிரேக், கிளட்ச் லிவர்கள் சூப்பர் நோவா மற்றும் அரோரா வேரியன்ட்களில் கூடுதல் வசதிகளாக வழங்கப்பட்டுள்ளன.
பைக்கின் இதயம் எனக் கொள்ளப்படும் 349 சிசி ஜே சீரிஸ் ஏர் கூல்டு எஞ்சின், 20.2 பி.எச்.பி. பவரையும், 27 என்.எம். டார்க் திறனையும் வழங்குகிறது. இதற்கு 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
வருகிற செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் இந்த பைக்கின் ஆரம்ப விலை ரூ.1.96 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வண்ணங்களின் தரப்பில் —
பயர்பால் வேரியன்ட்: ஆரஞ்சும், கிரே-யும்
ஸ்டெல்லர்: மேட் கிரே, மெரைன் புளூ
அரோரா: ரெட்ரோ கிரீன், அரோரா ரெட்
சூப்பர் நோவா: கருப்பு நிறம் என தனித்துவமாக காட்சியளிக்கின்றன.
புதிய வண்ண ஆட்டத்துடன் வரும் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350, பைக் பிரியர்களுக்கு மறுபடியும் புதிய அனுபவத்தை தரப்போவதாக எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Meteor 350 Bike Royal Enfield has updated it with new colors with great features do you know what special