'எந்தவொரு வர்த்தக ஒப்பந்தத்தையும் தொடரும்போது இந்தியா தனது தேசிய நலனைப் பாதுகாக்கும்': அமைச்சர் பியூஷ் கோயல்..! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 25 வீதம் வரிவித்துள்ளார். இந்த வரி விதிப்பின் தாக்கங்களை மத்திய அரசு ஆய்வு செய்து வருவதாக மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக லோக்சபாவில் அவர் கூறியதாவது: உலகப் பொருளாதாரங்களுடனான எந்தவொரு வர்த்தக ஒப்பந்தத்தையும் தொடரும்போது இந்தியா தனது தேசிய நலனைப் பாதுகாக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா அறிவித்த வரி விதிப்பின் தாக்கங்கள் குறித்து ஆராய்ந்து வருகிறதாகவும், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் ஏற்றுமதியாளர்கள், மற்றும் அனைத்து பங்குதாரர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி, இந்தப் பிரச்னை குறித்த அவர்களின் மதிப்பீடு குறித்த தகவல்களைச் சேகரித்து வருகிறதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிக்க இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே நான்கு சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், முக்கிய நலன்களில் இந்தியா சமரசம் செய்ய வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளார். மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் இந்தியப் பொருளாதாரம் விரைவில் உலகின் மூன்றாவது பெரிய நாடாக மாறும் என்றும் கூறியுள்ளார்.

தற்போது உலகின் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக இந்தியா திகழ்கிறது. அத்துடன், சீர்திருத்தங்கள், விவசாயிகள், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்களின் கடின உழைப்பின் அடிப்படையில், சில ஆண்டுகளில் இந்தியா உலகின் 11-வது பெரிய நாடாக இருந்து 05-வது பெரிய நாடாக முன்னேற்றம் கண்டுள்ளதுஎன்று தெரிவித்துள்ளார். மேலும், உலகளாவிய நிறுவனங்களும் பொருளாதார வல்லுநர்களும் இந்தியாவை உலகப் பொருளாதாரத்தில் ஒரு பிரகாசமான இடமாகப் பார்க்கிறார்கள் என்றும்  மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் லோக்சபாவில் பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

India will protect its national interest while pursuing any trade deal says Piyush Goyal


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->