நீட் அச்சம்: அம்மா, அப்பா மன்னிச்சுடுங்க... கடிதம் எழுதிவிட்டு மாணவன் எடுத்த முடிவு!
neet coaching UP Student death
உத்தரப்பிரதேசம் ராம்பூரைச் சேர்ந்த 21 வயது முகமது அன் என்பவர், மருத்துவ இளங்கலை படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கான பயிற்சிக்காக நான்கு நாட்களுக்கு முன் கான்பூர் ராவத்பூரில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தார்.
நேற்று மதியம் அவரது அறைத் தோழர் இம்தாத் ஹசன், பிரார்த்தனைக்குச் செல்ல அழைத்தபோது முகமது மறுத்துவிட்டார். சில நேரம் கழித்து திரும்பிய இம்தாத், அறை உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்ததை கவனித்தார். பலமுறை அழைத்தும் பதில் இல்லாததால் அவர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, முகமது மின்விசிறியில் தூக்கிட்டு உயிரிழந்திருந்தார். அவரிடம் இருந்து இரண்டு பக்க தற்கொலைக் கடிதம் மீட்கப்பட்டது. அதில், “அம்மா, அப்பா, தயவு செய்து என்னை மன்னியுங்கள். நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறேன். உங்கள் கனவுகளை நிறைவேற்ற முடியாததால் என் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன். இதற்கு வேறு யாரும் காரணமில்லை, நான்தான் முழுப் பொறுப்பு” என்று எழுதியிருந்தார்.
போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
neet coaching UP Student death