அரசியல் களம் சூடுபிடிக்கிறது! 13-ம் தேதி தமிழ்நாடு தேர்தல் அட்டவணை அறிவிப்பு...?
political arena heating up Tamil Nadu election schedule announced 13th
தமிழ்நாடு,கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய ஐந்து மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் மே-ஜூன் மாதங்களில் நிறைவடைய இருப்பதால், தேர்தல் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.மே 7-ம் தேதி மேற்கு வங்காளம், மே 10-ம் தேதி தமிழ்நாடு, மே 20-ம் தேதி அசாம், மே 23-ம் தேதி கேரளா சட்டசபைகளின் காலாவதி முடிவடைகிறது.

புதுச்சேரியின் பதவிக்காலம் ஜூன் 15-ம் தேதி நிறைவடைகிறது. இதையடுத்து, இந்த ஐந்து மாநிலங்களிலும் தேர்தலை குறித்த காலத்துக்குள் நடத்தி முடிக்க இந்திய தேர்தல் ஆணையம் தீவிர ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளது.
மாநிலத் தேர்தல்களுக்கு முன், தலைமை தேர்தல் கமிஷனர் தனது குழுவுடன் நேரடியாக மாநிலங்களுக்கு சென்று, வாக்குப்பதிவு நடத்த உகந்த தேதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், உள்ளூர் விடுமுறைகள், திருவிழாக்கள், தேர்வுகள் போன்றவை பாதிக்குமா என விரிவாக ஆய்வு செய்வது வழக்கமாகும்.
அந்த வகையில், முதற்கட்டமாக அசாமில் ஆய்வு மேற்கொண்ட குழு, பின்னர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பணிகளை மதிப்பீடு செய்தது. தொடர்ந்து கேரளா மற்றும் மேற்கு வங்காளத்திலும் ஆய்வு நடைபெற உள்ளது.
இந்த கலந்தாய்வில் அரசியல் கட்சித் பிரதிநிதிகள், மாவட்ட கலெக்டர்கள்,அமலாக்கத்துறை அதிகாரிகள், காவல் உயர் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு கருத்துகளை பகிர்ந்து கொள்கிறார்கள்.
இந்த ஆய்வுகளின் அறிக்கையை டெல்லியில் மீளாய்வு செய்த பிறகு, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் தேர்தல் தேதிகளை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்.
இதனால், தேர்தல் தேதி அறிவிப்பு 10-ம் தேதிக்குப் பிறகு எந்நேரமும் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அரசியல் வட்டாரங்களில், வரும் 13-ம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது.
English Summary
political arena heating up Tamil Nadu election schedule announced 13th