234 தொகுதிகளுக்கும் 2 வாரங்களில் வேட்பாளர் பட்டியல் வெளியீடு… நேர்காணலை தொடங்கும் விஜய்...!
Candidate list all 234 constituencies released 2 week Vijay start interviews
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி வரும் 13-ந்தேதிக்குள் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால், மாநில அரசியல் களம் முழுவதும் தேர்தல் சூடு அதிகரித்துள்ளது.
இதையடுத்து அனைத்து கட்சிகளும் வேட்பாளர் தேர்வு மற்றும் அமைப்பு பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன.முதன்முறையாக சட்டசபை தேர்தல் களத்தை சந்திக்கவுள்ள தமிழக வெற்றிக்கழகம் கூட முழு வேகத்தில் தேர்தல் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.
போட்டியிட விரும்புவோரிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ள நிலையில், சேலம், வேலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளுடன் விஜய் நேரடி ஆலோசனை கூட்டங்களை நடத்தி கட்சியின் வலிமையை உறுதிப்படுத்தி வருகிறார்.
அடுத்த கட்டமாக, சட்டசபை தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் இரண்டு வாரங்களில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் நேர்காணலை விரைவில் தொடங்க உள்ள விஜய், ஏற்கனவே ஒவ்வொரு தொகுதியிலும் நான்கு பேர் வீதம் முன்னுரிமைப் பட்டியல் தயாரித்து முடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
English Summary
Candidate list all 234 constituencies released 2 week Vijay start interviews