காங்கிரசுடன் வலுவான கூட்டணி… 4 தேர்தல்களை சந்திக்கும் முதல் கூட்டணி திமுக...! -மு.க.ஸ்டாலின் பெருமிதம் - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இல்லத் திருமண விழா அரசியல் பிரமுகர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவை மு.க.ஸ்டாலின் தலைமையில் நடத்தி வைத்தார்.

இந்த விழாவில் துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திராவிட முன்னேற்றக் கழகம் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மேலும், திருமண நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், “இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியுடன் வெற்றிகரமாக கூட்டணி ஒப்பந்தத்தை நிறைவு செய்துள்ளோம்.

அனைவரும் பாராட்டும் வகையில் வலுவான தேர்தல் கூட்டணியை அமைத்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

மேலும், “தமிழக அரசியல் வரலாற்றில் ஒரே கூட்டணி தொடர்ந்து நான்கு தேர்தல்களை சந்திப்பது இதுவே முதல் முறை.

பொதுவாக ஒரு சட்டமன்றத் தேர்தலுக்காக உருவாகும் கூட்டணி அடுத்த தேர்தலுக்கு நீடிப்பது அரிது; ஆனால் எங்கள் கூட்டணி உறுதியுடன் தொடர்கிறது” என பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Strong alliance Congress DMK first alliance face 4 elections MK Stalin proud


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->