நாமக்கல் முட்டை சந்தையில் சரிவு: பண்ணையில் விலை குறைந்தும்… கடைகளில் ஏன் குறையவில்லை? - Seithipunal
Seithipunal


நாமக்கல் மண்டலம் தமிழ்நாட்டின் ‘முட்டை தலைநகரம்’ என அழைக்கப்படும் அளவுக்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட முட்டைக்கோழி பண்ணைகளின் மையமாக விளங்கி வருகிறது. இங்கு தினமும் 7 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு, மாநிலத்தின் பல பகுதிகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

ஆனால் கோடை வெப்பம் தீவிரமாவதும், ரம்ஜான் பண்டிகை காலம் தொடங்கியதும் முட்டை நுகர்வு கணிசமாகக் குறைந்துள்ளது. இதற்கிடையே அமெரிக்கா–ஈரான் மோதல் காரணமாக அரபு நாடுகளுக்கான ஏற்றுமதி பாதிக்கப்பட்டதால், சுமார் 80 லட்சம் முட்டைகள் தேக்கமடைந்து கிடக்கின்றன.

இதன் தாக்கமாக சந்தையில் விலை சரிவு தென்பட ஆரம்பித்துள்ளது.கடந்த 13 நாட்களுக்கு முன்பு பண்ணை கொள்முதல் விலை 540 காசுகளாக இருந்த நிலையில், படிப்படியாக சரிந்து தற்போது 430 காசுகளாக குறைந்துள்ளது.

குறுகிய காலத்திலேயே 110 காசுகள் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பது பண்ணையாளர்களுக்கு பெரும் இழப்பாக மாறியுள்ளது.ஆனால் இதற்கு மாறாக, சேலம் மற்றும் நாமக்கல் பகுதிகளிலுள்ள சில்லரை கடைகளில் ஒரு முட்டை இன்னும் 600 முதல் 650 காசுகள் வரை விற்பனை செய்யப்படுகிறது.

பண்ணை விலை குறைந்தும், பொதுமக்களுக்கு அந்த நன்மை சென்றடையாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு முட்டைக்கு 2 ரூபாய்க்கும் மேல் கூடுதலாக விற்பனை செய்வது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

“பண்ணையில் விலை சரிந்தால் எங்களுக்கு என்ன பயன், கடைகளில் விலை குறையவே இல்லை!” என பண்ணையாளர்களும், நுகர்வோரும் ஒரே சத்தத்தில் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Decline Namakkal egg market Even though prices fallen farm why havent they fallen stores


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->