வர விரும்பினால் வரலாம்...! ஜெயக்குமார் -க்கு த.வெ.க. கதவு திறந்ததே இருக்கும்...! - செங்கோட்டையன் அதிரடி அழைப்பு - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டம் கோபி பேருந்து நிலையத்தில் இன்று தமிழக வெற்றிக்கழகத்தின் (த.வெ.க.) தேர்தல் பிரசாரப் பயணத்தைத் தொடங்கும் வகையில் பிரசார வாகன அறிமுக விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் த.வெ.க. நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கலந்துகொண்டு, கொடியசைத்து பிரசார வாகனத்தை அதிகாரப்பூர்வமாக இயக்கி வைத்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முதற்கட்டமாக ஈரோடு சட்டமன்றத் தொகுதியின் பல பகுதிகளில் பிரசார வாகனங்கள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக கோபிச்செட்டிப்பாளையம் பகுதிகளில் தொடங்கி கிராமம் தோறும் கட்சியின் கொள்கைகள் மக்களிடம் கொண்டு செல்லப்படும்.

கட்சியின் புதிய ‘விசில்’ சின்னத்தை ஒவ்வொரு வீட்டுக்கும் அறிமுகப்படுத்தும் நோக்கில் இந்தப் பிரசாரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுக்குழுக் கூட்டத்தில் விஜய் அறிமுகப்படுத்திய இந்தச் சின்னத்திற்கு இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது” என்றார்.

மேலும், “நமது வாக்கு ஜனநாயகத்தை காக்கும் சக்தி. அதை வீணடிக்காமல் திராவிட முன்னேற்றக் கழகம் அரசை தோற்கடிக்க மக்கள் வாக்களிக்க வேண்டும். தேர்தல் நேரத்தில் கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் தெரிவித்து மக்களை ஏமாற்றும் அரசியல் நாடகம் நடக்கிறது.

3000 ரூபாய் வழங்குவதாக கூறுவது கூட வெறும் வாக்குறுதி மட்டுமே” என குற்றம்சாட்டினார்.அத்துடன், காங்கிரஸ் தொடர்ந்து திமுகவுடன் கூட்டணியில் இருப்பதாகவும், கூடுதல் தொகுதிகளுக்காக அரசியல் பேரம் நடைபெறுவதாகவும் விமர்சித்தார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் த.வெ.க.வில் இணைய விரும்பினால் வரவேற்கத் தயாராக இருப்பதாகவும், அதற்கான முடிவு பின்னர் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

If you want come you come TVK door open Jayakumar Sengottaiyan call action


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->