6 மாநிலங்களவை இடங்களுக்கு கடைசி நாள் பரபரப்பு: காங்கிரஸ் வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக் அறிவிப்பு...!
Last day excitement 6 Rajya Sabha seats Christopher Tilak announced Congress candidate
தமிழ்நாடு மாநிலத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால் அரசியல் வட்டாரம் பரபரப்பாகியுள்ளது.

இந்தக் கூட்டணி கணக்கில், திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான அணிக்கு கிடைத்துள்ள 4 இடங்களில், திமுக 2, இந்திய தேசிய காங்கிரஸ் 1, தேசிய முற்போக்கு திராவிட கழகம் 1 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்துகிறது.
இதற்கிடையில் காங்கிரஸ் சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நீடித்து வந்த நிலையில், தற்போது அந்தக் கட்சி தனது அதிகாரப்பூர்வ வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக் என்பவரை அறிவித்துள்ளது.
மேலும், திருச்சி பூர்வீகமாகக் கொண்ட கிறிஸ்டோபர், நாகாலாந்து, சிக்கிம்,மணிப்பூர், மற்றும் திரிபுரா மாநிலங்களில் காங்கிரஸ் பொறுப்பாளராக பணியாற்றிய அனுபவம் மிக்க நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Last day excitement 6 Rajya Sabha seats Christopher Tilak announced Congress candidate