இந்தியாவில் மின்சார இருசக்கர வாகன சந்தை 46% வளர்ச்சி: இந்தியாவில் டாப் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பட்டியல் வெளியீடு!ஓலாவுக்கு அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக 2026 பிப்ரவரி மாதத்தில் இந்த சந்தை கணிசமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அரசு தரவுகளின்படி, அந்த மாதத்தில் மட்டும் நாடு முழுவதும் 1,11,680 மின்சார இருசக்கர வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இது கடந்த ஆண்டின் அதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 46 சதவீத வளர்ச்சியாகும்.

ஒருகாலத்தில் இந்த சந்தையில் ஓலா எலக்ட்ரிக் முன்னணி நிறுவனமாக இருந்தது. ஆனால் தற்போது பாரம்பரிய இருசக்கர வாகன நிறுவனங்கள் மின்சார சந்தையில் தீவிரமாக களமிறங்கியதால் போட்டி அதிகரித்துள்ளது. அதன் விளைவாக, ஒரு காலத்தில் மார்க்கெட்டில் முன்னிலையில் இருந்த ஓலா நிறுவனம் தற்போது டாப்-5 பட்டியலில்கூட இடம்பெறாத நிலை ஏற்பட்டுள்ளது.

பிப்ரவரி மாத விற்பனை பட்டியலில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த நிறுவனம் தனது மின்சார ஸ்கூட்டர்களை மட்டும் 31,600 யூனிட்கள் விற்பனை செய்து கடந்த ஆண்டை விட 67 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

இரண்டாவது இடத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் உள்ளது. சேடக் (Chetak) மின்சார ஸ்கூட்டர் மூலம் பிப்ரவரியில் 25,323 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 17 சதவீத வளர்ச்சியாகும்.

மூன்றாவது இடத்தை ஏதர் எனர்ஜி பிடித்துள்ளது. இந்த நிறுவனம் 20,581 மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனை செய்து கடந்த ஆண்டை விட 72 சதவீதம் அதிக வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

நான்காவது இடத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ‘விடா’ (Vida) மின்சார ஸ்கூட்டர்கள் உள்ளன. இந்த நிறுவனம் 12,512 வாகனங்களை விற்பனை செய்து கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 364 சதவீதம் என்ற மிகப்பெரிய வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

ஐந்தாவது இடத்தில் கிரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் உள்ளது. ஆம்பியர் (Ampere) என்ற பிராண்டில் மின்சார ஸ்கூட்டர்களை விற்பனை செய்யும் இந்த நிறுவனம் பிப்ரவரி மாதத்தில் 4,725 யூனிட்கள் விற்பனை செய்து 27 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது.

ஒருகாலத்தில் மின்சார இருசக்கர வாகன சந்தையை வழிநடத்திய ஓலா எலக்ட்ரிக் தற்போது இந்த டாப்-5 பட்டியலில் கூட இடம்பெறாதது, இந்திய EV சந்தையில் ஏற்பட்டுள்ள பெரிய மாற்றத்தை வெளிப்படுத்துகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Electric two wheeler market in India grows by 46 List of top 5 electric scooters in India released Shock for Ola


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->