88 கோடி ரூபாய்... 101 கிலோ தங்கத்தால் ஆன டாய்லெட்!
Gold Toilet Price viral
அமெரிக்காவில் தங்கத்தால் ஆன ஒரு டாய்லெட் தற்போது உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
பிரபல கைவினைக் கலைஞர் மொரிசியோ கட்டெலன் வடிவமைத்த இந்த டாய்லெட் முழுமையாக 102.1 கிலோ தங்கத்தால் தயாரிக்கப்பட்டது. தங்கத்தின் பிரகாசம் மிளிரும் இந்த ஆடம்பர டாய்லெட், வருகிற நவம்பர் 18ஆம் தேதி நியூயார்க் நகரத்தில் ஏலத்துக்கு வர உள்ளது.
ஏலத்தின் ஆரம்ப விலை இந்திய மதிப்பில் சுமார் 88 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பும், முழுத் தங்க கட்டுமானமும் உலகின் மிக ஆடம்பரமான உபயோகப் பொருளாக இதை மாற்றியுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. தங்கத்தின் விலை ஏற்றத்தால் தங்கள் வாழ்க்கைத் தேவைகள் கூட சிரமமாகி வரும் நிலையில், சிலர் இதை "பணக்காரர்களின் வீண் செலவு" எனக் கூறி விமர்சிக்கிறார்கள்.
சிலர் இதை கலை நயத்துடன் உருவாக்கப்பட்ட கைவினை அற்புதம் எனப் பாராட்டினாலும், பலர் “தங்கம் மனிதர்களுக்காக அல்ல, ஆடம்பர காட்சிக்காக மாறி விட்டது” எனப் பதிவிட்டு தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த தங்க டாய்லெட் ஏலத்தில் யார் வாங்கப்போகிறார் என்ற கேள்வி உலகளவில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.