அந்த ரூ.30,000 கோடி... லீக்கான ஆடியோ... CM ஸ்டாலின் இதுவரை விளக்கம் கொடுத்தாரா? கொந்தளிக்கும் இபிஎஸ்!
ADMK Edappadi Palaniswami DMK MK Stalin PTR Audio
சேலம் மாவட்டம் ஓமலூரில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, “திமுக அரசு நான்கரை ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு எந்த சாதனையும் செய்யவில்லை. அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை திறந்து வைப்பது தவிர, புதிய முயற்சிகள் எதுவும் இல்லை. இதுவரை நடந்தது ஊழலும், லஞ்சமும் தான்.
“திமுக ஆட்சியின் ஒவ்வொரு துறையிலும் லஞ்சம் ஊடுருவி விட்டது. இந்தியாவிலேயே மிக மோசமான, ஊழல் நிறைந்த மாநிலம் தமிழ்நாடு ஆகிவிட்டது. மக்களுக்காகச் செயல்பட வேண்டிய அரசு, குடும்ப நலனுக்காகச் செயல்படுகிறது. திமுக ஒரு அரசியல் கட்சி அல்ல; அது குடும்ப கார்ப்பரேட் நிறுவனம். குடும்பமே ஆட்சி நடத்துகிறது” என குற்றம்சாட்டினார்.
மேலும், “இன்றைய நிலையில் தமிழகத்துக்கு நான்கு முதல்வர்கள் உள்ளனர் — முதல்வர் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின், ஸ்டாலினின் மனைவி, மேலும் நான்காவது யார் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்” என பழனிசாமி விமர்சித்தார்.
திமுக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாக வெளியாகிய ஆடியோவில், உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரீசன் ரூ.30,000 கோடியை கைகளில் வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுகிறார்கள் என கூறப்பட்டுள்ளது.
இந்த ஆடியோ குறித்து இதுவரை முதல்வர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இதை எதிர்க்கட்சிகள் சொன்னால் அரசியல் குற்றச்சாட்டு என சொல்வார்கள், ஆனால் இதை சொல்வது அவர்களுடைய அமைச்சரே என்றால் அது உண்மையில்லை என முடியுமா?” என அவர் கேள்வி எழுப்பினார்.
English Summary
ADMK Edappadi Palaniswami DMK MK Stalin PTR Audio