சண்டை பயிற்சியாளர் பலியான விவகாரம்! இயக்குனர் ரஞ்சித் நீதிமன்றத்தில் ஆஜர்!
Stunt Master death Director Pa Ranjith court
நாகை மாவட்டத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கும் 'வேட்டுவம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கீழ்வேளூர், வெண்மணி, விழுந்தமாவடி, காரைமேடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
சமீபத்தில், விழுந்தமாவடி பகுதியில் படத்தின் முக்கியமான கார் சேசிங் காட்சி படமாக்கப்பட்டது. இதில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றிய மோகன்ராஜ் (52) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த துயர நிகழ்வைத் தொடர்ந்து, மோகன்ராஜ் உயிரிழந்த சம்பவம் குறித்து கீழையூர் காவல் நிலையத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் உட்பட நான்கு பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வழக்கு தொடர்பான விசாரணைக்காக இயக்குனர் பா.ரஞ்சித் கீழ்வேளூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினார். வழக்கை பரிசீலித்த நீதிபதி, பா.ரஞ்சித்தை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.
இதற்கு முன், இதே வழக்கில் தொடர்புடைய மூன்று பேர் முன்ஜாமின் பெற்றிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மோகன்ராஜின் மரணம் திரைப்படத் தொழிலில் பாதுகாப்பு நடைமுறைகள் மீதான சிந்தனையை தூண்டும் வகையில் கவலை எழுப்பி உள்ளது.
English Summary
Stunt Master death Director Pa Ranjith court