கவின் கொலை வழக்கு - சுர்ஜித்தின் தந்தை கைது.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் என்பவரின் மகன் கவின். சென்னையில் பிரபல ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த கவின் விடுமுறைக்காக ஊருக்கு சென்றிருந்த நிலையில், கடந்த 27-ந் தேதி நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியைச் சேர்ந்த சுர்ஜித் என்ற இளைஞரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இதையடுத்து போலீசார் குற்றவாளியான சுர்ஜித்தைக் கைது செய்து அவரிடம் நடத்திய விசாரணையில் சுர்ஜித்தின் அக்காவான சுபாஷினி என்பவரை வேறு சமூகத்தைச் சேர்ந்த கவின் காதலித்து வந்ததால் அவர் ஆணவ கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இதற்கிடையே இந்தக் கொலை சம்பவத்திற்கு சுர்ஜித்தின் பெற்றோரும் உடந்தை என்றும் அவர்களையும் கைது செய்தால் தான் கவின் உடலை பெற்றுக்கொள்வோம் என்று கூறி கவினின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவரது பெற்றோரான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்து தீவிரமாகத் தேடி வந்தனர்.

இருப்பினும், அரசு அறிவித்த நிவாரண நிதியை கவினின் பெற்றோர் வாங்க மறுத்ததால் இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், சுர்ஜித்தின் தந்தையான சிறப்புக் காவல் படை எஸ்.ஐ சரவணன் கைது செய்யப்பட்டார். 

இதைத் தொடர்ந்து சரவணன் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் சத்யா முன்பு ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது, நீதித்துறை நடுவர் சரவணனை வரும் எட்டாம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன் padi saravanan பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

surjith father arrested for kavin murder case


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->