உச்சநீதிமன்றத்தில் fire-ஆன வாதம்! காவலர்கள் வற்புறுத்தலே விஜய் வெளியேற முக்கிய காரணம்! - த.வெ.க தரப்பு
Argument Supreme Court that fire main reason Vijays exit was polices insistence tvk
கரூரில் கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற த.வெ.க தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் பலியாகிய துயரச் சம்பவம், தற்போது உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது.இச்சம்பவத்தை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை (SIT) நியமித்தது. அந்த உத்தரவுக்கு எதிராக த.வெ.க தேர்தல் பிரசார பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா சார்பில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், “உயர்நீதிமன்றம் விஜய் குறித்து தேவையற்ற கருத்துகள் முன்வைத்து, அவரின் தலைமை குணத்தை சந்தேகப்பட வைத்துள்ளது. நாங்கள் விசாரணைக்கு எதிரல்ல; ஆனால், தமிழ்நாடு காவல் அமைப்பின் கீழ் உள்ள SIT மீது நம்பிக்கை இல்லை. எனவே, உச்சநீதிமன்றம் முன்னாள் நீதிபதி தலைமையில் தனி குழுவை அமைக்க வேண்டும்” எனக் கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணை இன்று நீதிபதிகள் ஜே.கே. மஹேஸ்வரி மற்றும் என்.வி. அஞ்சாரியா அமர்வில் தொடங்கியது.த.வெ.க தரப்பு வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம், “விஜய் சம்பவ இடத்திலிருந்து ஓடவில்லை; காவல் பாதுகாப்பின் கீழ் வெளியேறினார்” என விளக்கமளித்தார்.
இதற்கு பதிலாக, தமிழக அரசு சார்பில் முகுல் ரோஹத்கி, “அஸ்ரா கர்க் குழு சுயாதீனமாக, நீதிமன்றத்தின் உத்தரவின்படி நியமிக்கப்பட்டது. விசாரணை வெளிப்படையாக நடைபெறுகிறது” என தெரிவித்தார்.இதற்கிடையில், உச்சநீதிமன்றம், “கரூர் சம்பவம் மதுரை அமர்வு வரம்பிற்குள் வரும்போது, சென்னை நீதிமாற்றமே தாமாக முன்வந்து விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பித்தது எப்படி?” என கேள்வி எழுப்பி, விசாரணை தீவிரமடைந்தது.
இதில் கூடுதல் பகுதி (மீட்டமைக்கப்பட்ட):கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் உறவினர்களை விஜய் சந்திக்கவில்லை என தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தபோது, உச்சநீதிமன்றம் நீதிபதிகள்,“அவர் சென்றாரா? இல்லையா? என்பது இப்போது விசாரணைக்கு தொடர்புடைய விஷயம் அல்ல”என்று தெளிவாகக் குறிப்பிட்டனர்.
English Summary
Argument Supreme Court that fire main reason Vijays exit was polices insistence tvk