தூத்துக்குடியில் அதிர்ச்சி! காவல் நிலையம் முன்பு தன்னைத் தீயிட்டுக் கொண்ட ஓட்டுநர் உயிரிழப்பு! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தை அதிர்ச்சியடைய வைத்த சோகமான சம்பவம் இது.முள்ளக்காடு காந்திநகர் பகுதியைச் சேர்ந்த பாக்கியராஜ் மகன் 42 வயது சுவிசேஷமுத்து என்பவர், மனைவி முத்துகனி மற்றும் 2 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். இதற்கு முன்னதாக, தூத்துக்குடி நகரில் பல இடங்களில் பிரியாணி கடை நடத்தி வந்த அவர், வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் தற்போது ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், கடந்த 2ம் தேதி குடும்பத்தில் ஏற்பட்ட தகராறின் போது உறவினர்கள் தாக்கியதாகத் தெரிவித்து சுவிசேஷமுத்து முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன் பேரில், மனைவியின் தங்கையின் கணவர் மாசானமுத்து உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஆனால், குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை எனத் தெரிவித்து, நேற்று இரவு காவல் நிலையத்திற்கே சென்று சுவிசேஷமுத்து கடும் ஆவேசம் அடைந்தார்.

மேலும், அதிகாரிகளுடன் தகராறு செய்து கொண்ட அவர், தன்னுடன் கொண்டுசென்ற கேனில் இருந்த மண்ணெண்ணெயை தன் மீது ஊற்றி, அனைவரும் அதிர்ச்சியடையும் வகையில் தீவைத்து கொண்டார்.இதனைக் கண்ட காவலர்கள், விரைந்து தீயை அணைத்து, கடுமையான தீக்காயங்களுடன் அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார்.இந்த துயரமான சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக முத்தையாபுரம் காவலர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shock Thoothukudi Driver dies after setting himself fire front police station


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->