ஹைதராபாத்தில் பள்ளி கட்டடத்தில் இருந்து குதித்து 10-ஆம் வகுப்பு மாணவி பலி!
school student jumped school building death Hyderabad
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து 10-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் இன்று பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலைக்கான காரணம்
15 வயது மதிக்கத்தக்க அந்த மாணவி ஐந்தாவது மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்த போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காகச் செகந்திராபாத்தில் உள்ள காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணை:
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது. ஆரம்பக்கட்ட விசாரணையில், மாணவி படிப்பில் கணவன் செலுத்தாமல் இருந்தது குறித்து அவரது பெற்றோர் அதிருப்தி தெரிவித்ததால், அந்த மாணவி கோபமடைந்து இந்த முடிவை எடுத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
தெலங்கானாவில் தொடர் சோகம்
கல்வி குறித்த அழுத்தம் காரணமாகத் தெலங்கானாவில் பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது இது இரண்டாவது சம்பவமாகும்.
முன்னதாக, நிஜாமாபாத் மாவட்டம், சந்த்ரூரில் உள்ள பள்ளியில் நேற்று 10-ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. அவர் தனது அறையில் உள்ள இரும்புக் கம்பியில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
English Summary
school student jumped school building death Hyderabad