ஐபிஎல் 2026: ஆர்சிபி-யின் புதிய சீருடையில் விராட் கோலி! சாம்பியன் பட்டத்தைத் தக்கவைக்கத் தயாராகும் பெங்களூரு!
IPL 2026 King Kohli in New RCB Colors Defending Champions Ready for Battle
ஐபிஎல் 2026 சீசன் தொடங்கவுள்ள நிலையில், நடப்புச் சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) தனது நட்சத்திர வீரர் விராட் கோலி புதிய சீருடையில் இருக்கும் பிரத்யேகப் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
வரலாற்று வெற்றியும் ஆறாத வடுவும்:
கடந்த சீசனில், 18 ஆண்டுகாலக் காத்திருப்புக்குப் பிறகு ஆர்சிபி அணி முதன்முறையாகக் கோப்பையை வென்று வரலாறு படைத்தது. இருப்பினும், அந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட எதிர்பாராத கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பாதுகாப்பு காரணங்களால் அந்த மைதானத்தில் போட்டிகள் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், தற்போது கர்நாடக கிரிக்கெட் வாரியம் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது.
கோலியின் 18 ஆண்டுகால லெகஸி:
புதிய சீசனுக்கான பயிற்சிகள் தொடங்கியுள்ள நிலையில், விராட் கோலி அணியுடன் இணைந்துள்ளார். "18 ஆண்டுகால விருப்பம், அசைக்க முடியாத மன உறுதி மற்றும் ஒரு மிகப்பெரிய லெகஸி" என கோலியைப் புகழ்ந்து ஆர்சிபி அணி பதிவிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ஒரு அணியில் 18 ஆண்டுகளைக் கடந்து நீடிக்கும் கோலியின் விசுவாசத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
முதல் மோதல்:
நடப்புச் சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களமிறங்கும் ஆர்சிபி, தனது முதல் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியை எதிர்கொள்கிறது.
English Summary
IPL 2026 King Kohli in New RCB Colors Defending Champions Ready for Battle