நெல்லையில் தொடர் கனமழை: 15 வீடுகள் இடிந்து சேதம்! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாற்றுத்திறனாளி தம்பதி!
Nellai Houses collapsed heavy rain
திருநெல்வேலி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாகக் கொட்டித் தீர்த்த கனமழையால், மாவட்டத்தில் மொத்தம் 15-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. மழையால் அணைகள் நிரம்பி, தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இன்றும் தென் மாவட்டங்களுக்குக் கனமழை நீடிக்க வாய்ப்புள்ளது.
வீடுகள் இடிந்த பகுதிகள்
நெல்லை டவுண், பாளையங்கோட்டை, மானூர், சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, திசையன் விளை உள்ளிட்டப் பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.
மாற்றுத்திறனாளி தம்பதி தப்பினர்
பாப்பாக்குடி ஒன்றியம், கொண்டாநகரம் சீனிவாசகபுரம் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மனோகர் (67) மற்றும் அவரது மனைவி மந்திரவடிவு (55) ஆகியோரின் வீடு அதிகாலை 5 மணியளவில் கனமழையின் காரணமாக திடீரென இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக, வீட்டிற்குள் இருந்த இருவரும் காயமின்றி உயிர் தப்பினர்.
அதிகாரிகள் ஆய்வு: இச்சம்பவத்தைத் தொடர்ந்து, கிராம நிர்வாக அலுவலர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
கோரிக்கை: வறுமையில் வாடும் மனோகரின் குடும்பம் வீட்டை இழந்ததால், மாவட்ட நிர்வாகம் உடனடியாகப் போதுமான நிவாரண உதவியும், புதிய வீடு கட்ட நிதி உதவியும் வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அளித்த தகவலின்படி, வீடுகள் இடிந்தது குறித்த தகவல்கள் உடனுக்குடன் வருவாய்த் துறை அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், விரைவில் அவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Nellai Houses collapsed heavy rain