ரஷ்யாவுக்கு 'செக்'.. இந்தியாவுக்கு 'ஆஃபர்'! - ரஷ்ய எண்ணெயைக் குறைத்தால் வெனிசுலா எண்ணெய்க்கு வரிச் சலுகை!-டிரம்ப் விடுத்த அதிரடித் தூது...! - Seithipunal
Seithipunal


உக்ரைன்-ரஷ்யப் போர்ச் சூழலில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியாவின் முடிவுக்கு அமெரிக்கா தொடர் முட்டுக்கட்டை போட்டு வந்தது. ரஷ்யாவின் போர்ப் பொருளாதாரத்தை முடக்க நினைத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அந்நாட்டிலிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது கடும் வரிகளை விதித்தார்.

எனினும், தனது எரிசக்தி பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ரஷ்யாவின் மலிவு விலை சலுகையைப் பயன்படுத்தி இந்தியா தொடர்ந்து எண்ணெய் கொள்முதல் செய்து வந்தது.

அதேவேளையில், வெனிசுலா மீதும் 25 சதவீத வரிச் சுமையை ஏற்றிய டிரம்ப் நிர்வாகம், தற்போது வெனிசுலா அதிபர் மதுரோவைச் சிறைப்பிடித்து அந்நாட்டு எண்ணெய் வளங்களை மறைமுகமாகக் கையாளத் தொடங்கியுள்ளது.

இந்த உலகளாவிய எரிசக்தி அரசியலில் ஒரு வியூக மாற்றமாக, ரஷ்யாவிடமிருந்து வாங்கும் எண்ணெயைக் குறைத்துக்கொண்டால், வெனிசுலாவிடமிருந்து தடையின்றி எண்ணெய் வாங்கலாம் என அமெரிக்கா ஆசை காட்டியுள்ளது.

ரஷ்ய மற்றும் வெனிசுலா என இருமுனை வரிச் சுமையைத் தவிர்க்க எண்ணும் இந்தியா, படிப்படியாக ரஷ்ய இறக்குமதியைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. இதன் பலனாக, வெனிசுலா எண்ணெய்க்கான வரியை அமெரிக்கா குறைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், இந்த எண்ணெய் விற்பனையை வெனிசுலாவின் PDVSA நிறுவனம் மேற்கொள்ளுமா அல்லது Vitol, Trafigura போன்ற சர்வதேச வர்த்தக நிறுவனங்கள் கையாளுமா என்பதில் இன்னும் மர்மம் நீடிக்கிறது.

மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி குறிப்பிட்டது போல, இந்தியா தனது எரிசக்தி ஆதாரங்களைப் பல்வகைப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, ரஷ்யாவிடமிருந்து தினசரி இறக்குமதி செய்யப்படும் 1.2 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை, பிப்ரவரியில் 1 மில்லியனாகவும், மார்ச் மாதத்தில் 8 லட்சம் பேரலாகவும் அதிரடியாகக் குறைக்க இந்தியா தயாராகி வருகிறது. இந்த நகர்வு சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் இந்தியாவின் புதிய நிலைப்பாட்டை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tax concessions Venezuelan oil if Russian oil imports reduced sensational message delivered by Trump


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?


செய்திகள்



Seithipunal
--> -->