10½ மணி நேரம் மூடப்படும் திருப்பதி நடை! – மார்ச் 3 சந்திர கிரகணத்தால் ஏழுமலையான் கோவிலில் அதிரடி மாற்றம்...!
Tirupati temple closed 10 and half hours Drastic changes Lord Venkateswara temple due lunar eclipse March 3
வருகிற மார்ச் 3-ஆம் தேதி விண்ணில் நிகழவிருக்கும் சந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அன்றைய தின வழிபாட்டு முறைகளில் முக்கிய மாற்றங்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) அறிவித்துள்ளது. கிரகணக் காலம் அன்று மாலை 3.20 மணி முதல் மாலை 6.47 மணி வரை நீடிக்கும் என்பதால், ஆகம விதிகளின்படி கிரகணம் தொடங்குவதற்கு 6 மணி நேரத்திற்கு முன்பாகவே நடை சாத்தப்படும்.

இதன்படி, மார்ச் 3 அன்று காலை 9 மணி முதல் இரவு 7.30 மணி வரை என சுமார் 10½ மணி நேரம் ஏழுமலையான் கோவில் நடை முழுமையாக அடைக்கப்பட்டிருக்கும்.இரவு 7.30 மணிக்கு நடை திறக்கப்பட்டதும், கோவிலைத் தூய்மைப்படுத்தும் புண்ணியாவதனம் உள்ளிட்ட புனிதச் சடங்குகள் நடைபெறும். பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய இரவு 8.30 மணிக்கு மேல் அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த இடைப்பட்ட காலத்தில் கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, அஷ்டதள பாத பத்மாராதனை உள்ளிட்ட அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், ரூ.300 சிறப்பு நுழைவு தரிசனம், வி.ஐ.பி. பிரேக் தரிசனம், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான முன்னுரிமை தரிசனங்கள் அனைத்தும் அன்றைய தினம் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
பக்தர்கள் இந்த நேர மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, தங்களின் திருமலை பயணத்தைத் திட்டமிடுமாறும், தரிசனச் சீட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதைக் கவனிக்குமாறும் தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.
கிரகணக் காலங்களில் திருமலை மலைப்பாதையில் நிலவும் போக்குவரத்து மற்றும் தங்குமிடம் தொடர்பான கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்கவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
English Summary
Tirupati temple closed 10 and half hours Drastic changes Lord Venkateswara temple due lunar eclipse March 3