தங்கத்தின் 'கண்ணாமூச்சி' ஆட்டம் - லட்சத்தைத் தாண்டிய வேகத்தில் சரிந்த விலை...! இன்றைய நிலவரம் என்ன...?
price plummeted after crossing lakh mark What situation today
தமிழக ஆபரணச் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை, எவராலும் கணிக்க முடியாத ஒரு 'ரோலர் கோஸ்டர்' பயணத்தை மேற்கொண்டு வருகிறது. கடந்த சில தினங்களாக விண்ணைத் தொடும் அளவிற்கு எகிறிய விலை, தற்போது அதே வேகத்தில் அதலபாதாளத்தை நோக்கிச் சரிந்து வருகிறது.
குறிப்பாக, நேற்று முன்தினம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 9,520 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 1,34,400 என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்த தங்கம், அடுத்த 48 மணி நேரத்திற்குள் வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் சரிவைக் கண்டுள்ளது.

நேற்று சவரனுக்கு ரூ. 7,600 சரிந்த நிலையில், இன்றும் அதே வேகத்தில் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு மீண்டும் ரூ. 7,600 குறைந்து, ரூ. 1,19,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதன் மூலம், கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ஒட்டுமொத்தமாக ரூ. 15,200 வரை சரிந்து, நடுத்தர வர்க்கத்தினருக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. ஒரு கிராம் தங்கம் தற்போது ரூ. 14,900 என்ற நிலைக்குக் கீழ் இறங்கியுள்ளது.
தங்கத்தின் தடம் பின்பற்றி வெள்ளியின் விலையும் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. நேற்று முன்தினம் கிலோவுக்கு ரூ. 25,000 உயர்ந்த வெள்ளி, இன்று கிராமுக்கு ரூ. 55 சரிந்து, ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ. 3,50,000-க்கு விற்பனை ஆகிறது.
சர்வதேசச் சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் லாப நோக்கம் காரணமாக, இந்த விலை மாற்றம் 'மின்னல் வேக' ஏற்ற இறக்கங்களைக் கண்டு வருவதாக சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
English Summary
price plummeted after crossing lakh mark What situation today