அடுத்த வருடம் ரிலீஸ் ஆகும் ராஜமௌலி - மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகும் 'வாரணாசி'..!
Rajamoulis Varanasi film will be released next year
மகேஷ்பாபு நடிப்பில் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கி வரும் படம் 'வாரணாசி'. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இப்படத்தின் அறிமுக விழா மிக பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. அன்றிலிருந்து இந்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த 'வாரணாசி' படத்தில், மகேஷ் பாபு ருத்ராவாகவும், ப்ரியங்கா சோப்ரா மந்தாகினியாகவும், பிருத்விராஜ் சுகுமாரன் கும்பாகவும் நடித்து வருகின்றனர். டைம் டிராவல் மற்றும் சைன்ஸ் ஃபிக்ஷன் படமாக உருவாகி வருகின்ற இந்த படத்தில், அட்வென்சர் வகையில் இதிகாச கதையையும் உள்ளுக்குள் வைத்திருக்கும் ஒரு படமாக இருக்கும் என்று படத்தின் அறிமுக டீசரில் பார்க்க முடிந்தது.
பெரிய பட்ஜெட்டில், மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு நடுவே இந்த படம் தயாராகி வருகிறது. அத்துடன், வரும் ஏப்ரல் 07, 2027 வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. விறுவிறுப்பாக படப்பிடிப்புகள் நடந்து வரும் நிலையில், ஐமேக்ஸ் திரைக்காக படம்பிடிக்கப்பட்டு வருகிறதாக கூறப்படுகிறது.
English Summary
Rajamoulis Varanasi film will be released next year