குண்டர் சட்டம் ரத்து; சிறையில் இருந்து வெளியில் வந்த ஏர்போர்ட் மூர்த்தி..! - Seithipunal
Seithipunal


கடந்த 2025-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் சென்னை போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் அருகே, புரட்சித் தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம், தொடர்பாக மெரினா காவல் நிலையத்தில் இருதரப்பிலும் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில், ஏர்போர்ட் மூர்த்தி மீது, கொலை முயற்சி வழக்கு போடப்பட்டு, கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அத்தோடு, இவர் மீது குண்டர் தடுப்புச் சட்டமும் போடப்பட்டது.

குண்டர் தடுப்பு சட்டத்தில் இவரை, கைது செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது மனைவி மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதிகள் பி. வேல்முருகன், ஜோதிராமன் அமர்வு முன் விசாரணக்கு வந்தது.

அப்போது, ஏர்போர்ட் மூர்த்தி தரப்பு வழக்கறிஞர், அரசியல் காரணங்களுக்காகவே குண்டர் தடுப்புச் சட்டம் போடப்பட்டிருப்பதாக வாதிட்டார். இதனை தொடர்ந்து, இந்த வழக்கில் விசாரணை நடத்திய நீதிபதிகள் ஏர்போர்ட் மூர்த்தி மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.

இதனையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஏர்போர்ட் மூர்த்தி இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். சிறை வாயிலில் பாஜக நிர்வாகி நடிகை கஸ்தூரி உட்பட பலர் காத்திருந்து, சிறையில் இருந்து வெளியே வந்த புரட்சித் தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்திக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். அத்துடன், அக்கட்சியின் தொண்டர்களும் உற்சாகமடைந்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Airport Murthy who was released from prison after the Goonda Act was repealed


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->