சட்டவிரோதமாக விற்கப்பட்ட 03 தமிழக வெண்கலச் சிலைகள்; இந்தியாவிடம் திரும்ப ஒப்படைப்பதாக அமெரிக்கா அறிவிப்பு..!
The United States has announced that it will return three illegally sold bronze statues from Tamil Nadu to India
அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி-யில் உள்ள புகழ்பெற்ற ஸ்மித்சோனியன் தேசிய ஆசியக் கலை அருங்காட்சியகம், தனது சேகரிப்பில் இருந்த மூன்று இந்திய வெண்கலச் சிலைகள் தமிழகக் கோயில்களில் இருந்து சட்டவிரோதமாக எடுத்துவரப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மீண்டும் இந்திய அரசிடம் ஒப்படைப்பதாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தின் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் உள்ள ஸ்ரீ பவ அவுதீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான, சோழர்காலத்தைச் சேர்ந்த சிவ நடராஜர் சிலை, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டத்தில் உள்ள ஆலத்தூர் விஸ்வநாதர் கோயிலுக்குச் சொந்தமான சோழர் காலத்தைச் சேர்ந்த சோமாஸ்கந்தர் சிலை, கள்ளக்குறிச்சி வட்டத்தில் உள்ள வீரசோழபுரம் சிவன் கோயிலுக்குச் சொந்தமான விஜயநகர காலத்தைச் சேர்ந்த சிலை, என 03 சிலைகளை, அருங்காட்சியகத்தின் ஆய்வுக் குழுவினர் ஆய்வு செய்துள்ளனர்.

குறித்த ஆய்வின் படி, இந்தச் சிலைகள் 1956 மற்றும் 1959-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த சிலைகள் தமிழகக் கோயில்களில் இருந்ததற்கான புகைப்பட ஆதாரங்கள் கிடைத்தன. அதைத்தொடர்ந்து, இந்தியத் தொல்லியல் துறையும் இந்த ஆதாரங்களை ஆய்வு செய்துள்ளது. அதன்படி, இந்தச் சிலைகள் சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டவை என்பதை உறுதி செய்துள்ளது.
இதையடுத்து, இந்த 03 பழங்கால சிலைகளையும் அமெரிக்கா திரும்ப அளிக்க உள்ளதாக வாஷிங்டனில் உள்ள ஸ்மித்சோனியன் அருங்காட்சியகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்தியத் தொல்லியல் துறை மற்றும் இந்தியத் தூதரகம் ஆகியவை இந்தச் சிலைகளைத் தாயகம் கொண்டு வருவதற்கான இறுதி ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன.
English Summary
The United States has announced that it will return three illegally sold bronze statues from Tamil Nadu to India